கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் இதுதான் – சோயப் அக்தர் பகிர் விளக்கம்

0
742
Virat Kohli ans Shoaib Akhtar

கடந்த ஆண்டு நடந்த முடிந்த உலகக் கோப்பை டி20 தொடர் உடன், தான் இனி டி20 போட்டிகளில் கேப்டனாக தொடரப் போவதில்லை என்று கூறி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் இனி இந்திய அணியை தலைமை தாங்க போவதாகவும் அதில் தன்னுடைய முழு கவனம் இனி இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் ஒரு சில நாட்கள் கழித்து பிசிசிஐ புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்தது. பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்க தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலும் தான் இனி கேப்டனாக தொடர போவதில்லை என்று கூறி அனைத்துவித பார்மெட்டிலும் இனி ஒரு வீரராக மட்டுமே தான் விளையாடப் போவதாக அதிரடியாக கூறினார்.

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி

2013 முதல் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி மிக சிறப்பாகவே விராட் கோலி வழிநடத்தினார். தலைமைப் பொறுப்பை அவர் ஏற்ற போது இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது. பின்னர் அவரது தலைமையிலான இந்திய அணி ஆண்டு ஆண்டுகளாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றி, முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வைத்தது என்று இந்திய அணி அவரது தலைமையில் மிக சிறப்பாகவே விளையாடியது.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி ஒரு நாள் போட்டிகளிலும் அவரது தலைமையிலான இந்திய அணி மிக சிறப்பாக தான் விளையாடியது. 2017 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டிக்கும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரின் அரையிறுதி
போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

ஒரு வீரராக அதே சமயம் ஒரு கேப்டனாக இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை விராட் கோலிக்கு உள்ளது என்று சொன்னால் யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை. இருப்பினும் ஏன் அவர் இவ்வாறு அனைத்து வித கிரிக்கெட் பார்மெட்களிலிருந்து தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்கிற கேள்வி அனைவருக்கும் இருந்து கொண்டே வருகிறது.

- Advertisement -

அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் விராட் கோலி சம்பந்தமாக ஒரு பகீர் விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.”விராட் கோலி எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மற்ற பேட்ஸ்மேன்களை விட அவர் நிறைய சாதனைகளை படைத்து இருக்கிறார். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அதே சமயம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான மனிதராகவே தற்பொழுது வரை இருந்து வருகிறார்.

அப்படியிருக்க அவர் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும். நிச்சயமாக இதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் உள்ளது. நிச்சயமாக அவரை கட்டாயப்படுத்தி கேப்டன் பதவியில் இருந்து விலக வைத்திருக்கிறார்கள். இதுதான் உண்மை, இதுதான் அங்கு நடந்துள்ளது என்று பகிரங்கமாக ஷோயப் அக்தர் தற்பொழுது கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் இவ்வாறு கூறிய விதம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.