இங்கி முதல் ODI.. விளையாடாத விராட் கோலி.. காரணம் என்ன? 2 இளம் வீரர்கள் அறிமுகம்.. வெளியான தகவல்கள்

0
419
Virat

இன்று நாக்பூர் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. அவர் விளையாட அதற்கான காரணம் குறித்து தற்பொழுது செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. அடுத்த இரண்டு போட்டிகள் பிப்ரவரி 9 மற்றும் 12ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இரண்டு இளம் வீரர்கள் அறிமுகம்

இந்த போட்டியில் விராட் கோலி விளையாடாத காரணத்தினால் இந்திய இடதுகை இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இந்தப் போட்டி அவருக்கு மிக முக்கியமான ஒன்றாக அமையும். அவர் இந்த போட்டியில் குறிப்பிட தகுந்த அளவில் விளையாடினால் மேற்கொண்டு வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாட முடியும்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் ஆனால் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் முகமது சாமி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு முதல் முறையாக இந்திய ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி விளையாடாத காரணம்

விராட் கோலிக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, கடைசி நேரத்தில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் என்று செய்திகள் வெளி வந்திருக்கிறது. மேலும் டாஸ் நிகழ்வில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் இதையே தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் இடம் பெற்று இருக்கிறார். ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. மேலும் வாஷிங்டன் சுந்தர் இருக்க அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. மேலும் பிரதான ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்திக்கு இடம் கொடுக்கப்படாமல் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருக்கிறார்.

இதையும் படிங்க : ஆஸி ஸ்டோய்னிஸ் ODI கிரிக்கெட்டில் திடீர் ஓய்வு.. சாம்பியன்ஸ் டிராபியில் வெளியேறினார்.. காரணம் என்ன?

இந்திய பிளேயிங் லெவன் : ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி.

- Advertisement -