ஆறு வருடம் கழித்து விராட் கோலி பந்து வீசியதைப் பற்றி அவரது இளவயது பயிற்சியாளர் சுவாரசிய கருத்து!

0
90
Virat kohli

இந்திய அணி தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்றின் இரண்டாவது மற்றும் தனது கடைசி போட்டியில் ஆங்காங் அணியை எதிர்த்து சில நாட்களுக்கு முன்பு விளையாடியது, இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 192 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹாங்காங் அணி சிறிய அணி என்றாலும் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்த்து 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையில் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

இந்தப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு குறிப்பாக ஆவேஸ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரது பந்து வீச்சு செயல்பாடும் மோசமாக இருந்தது. இருவரும் சேர்ந்து ஏறக்குறைய 8 ஓவர்களில் 100 ரன்களுக்கு பக்கம் கத்துக்குட்டி அணியான ஹாங்காங் அணிக்கு வாரி வழங்கி இருந்தார்கள். இது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவை மிகவும் வருத்தம் அடைய வைத்தது. அதை அவரும் போட்டியின் போதும் போட்டி முடிந்ததும் வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இந்தப் போட்டியின் இரண்டாம் பகுதியில் ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றி உறுதி என்று இருந்த சமயத்தில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சில் அனைவரும் ஆச்சரியப்படும் ஒரு முடிவை எடுத்தார். ஆட்டத்தில் 17வது ஓவரை அவர் விராட்கோலி இடம் கொடுத்தார். விராட் கோலியும் அந்த ஓவரை சிறப்பாக வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி பந்துவீசி இருந்தார். அதற்குப் பின்பு இப்போதுதான் சர்வதேச ஆட்டங்களில் பந்து வீசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு வருடங்கள் கழித்து விராட் கோலி பந்து வீசியது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளரான ராஜ் குமார் சர்மா நகைச்சுவையாக சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தக் கருத்தில் அல்பி மோர்கலையும் கொண்டுவந்துதான் உச்சகட்ட நகைச்சுவை. ஏனென்றால் விராட் கோலியின் ஓவரை ஒருமுறை அவர் அடித்து துவைத்து இருந்தார்.

விராட் கோலி பந்து வீசியது குறித்து அவரது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறும்போது ” விராட் கோலி ஒரு பந்து வீச்சாளராக எப்பொழுதும் அப்போது இருந்து நம்பிக்கையாகத்தான் இருந்தார். ஆனால் மோர்கல் அதை கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து குறைத்தார். ஆனாலும்கூட விராட் கோலி பந்தை கையில் எடுப்பதில் எப்பொழுதும் ஆர்வமாகவே இருந்தார். பந்தை கொடு நான் விக்கெட்டுகளை எடுக்கிறேன் என்று எப்பொழுதும் கூறுவார். அவர் மீண்டும் பந்து வீசுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -