“ஆர்சிபி ரசிகர்களே பண்டிகையை கொண்டாடுங்க” மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டனாக விளையாடுகிறார் விராட் கோலி! – பாப் டு பிளசிஸ்-க்கு என்னவாயிற்று?

0
718

ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்து வரும் பாப் டு பிளசிஸ் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் பொறுப்பில் இல்லை. விராட் கோலிக்கு அந்த கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? என்பதை பின்வருமாறு காண்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் போடும்போது பலரும் ஆச்சரியப்படும் விதமாக, ஆர்சிபி அணிக்கு தலைவராக விராட் கோலி உள்ளே வந்தார்.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, கடந்த 2022 ஐபிஎல் சீசனில் அணிக்கு புதிதாக எடுக்கப்பட்ட பாப் டு பிளசிஸ் தலைமையில் விளையாடினார். இந்த சீசனிலும் அவரது கேப்டன் பொறுப்பின் கீழ் தொடர்ந்து வருகிறார்.

ஏப்ரல் 17ஆம் தேதி கடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின்போது அபாரமாக பேட்டிங் செய்து வந்த பாப் டு பிளசிஸ் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இப்போட்டியின் நடுவே இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போது பிசியோ மருத்துவரை அழைத்து சிகிச்சை பெற்றபிறகு மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்ததை போட்டியின் நடுவே பார்க்க முடிந்தது.

ஆகையால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டு பிளிசிஸ் முழு உடல்தகுதியுடன் இல்லை. பேட்டிங் மட்டுமே செய்வார் என கூறப்பட்டுள்ளது. “இம்பேக்ட் வீரராக” விளையாடுகிறார் என தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வரும் விராட் கோலி கூறினார். போட்டியின் இரண்டாம் பாதியில் பாப் டு பிளசிஸ் வெளியில் சென்று வேகப்பந்துவீச்சாளர் வைஷாக் உள்ளே எடுத்து வரப்படுவார் என்றும் விராட் கோலி தெரிவித்தார்.

- Advertisement -

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு விராட் கோலியை மீண்டும் கேப்டன் பொறுப்பில் பார்த்ததால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ட்விட்டர் பக்கத்தில் இதற்காக கொண்டாடியும் வருகின்றனர்.