விராட் கோலியையும் தோனியையும் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனைகளை உருவாக்கினார்கள் என்று முன்னாள் வீரர் முகமது கையிப், பாராட்டியுள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் கேப்டனான விராட் கோலி, தனக்கு முன்னால் இருந்த தோனியைவிட ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றும் கையிப் கூறியுள்ளார்.
2014 முதல் 2022 வரை 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய விராட் கோலி, 40 வெற்றிகளைப் பெற்றார், சொந்த மண்ணில் ஒரு தொடரையும் தோற்றதில்லை. மேலும், ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
இது குறித்து வீடியோ வெளியிட்ட கையிப், “விராட் கோலி தோனியைவிட ஒரு படி மேலே போனார். அணி சிரமத்தில் இருக்கும்போது அவரது ஆக்ரோஷமும், 20 விக்கெட்டுகளை வீழ்த்துங்கள், இல்லையென்றால் மைதானத்துக்கே வர வேண்டாம் என்று வீரர்களிடம் சொன்ன தைரியமும் தனிச்சிறப்பு.”
சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவார்:
“கோலி கேப்டனாக இருந்தபோது 7 ஆண்டுகளில் 31 டெஸ்டில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோற்றோம். கோர் டீமைத் தக்கவைத்தார். பேஸ் பவுலர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார். வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகியோரை சிறப்பாகப் பயன்படுத்தினார். எதிரணிக்கு ஏற்ப திட்டம் போட்டார்.”
” உதாரணமாக, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரே என்றால் பேஸர்களைப் பயன்படுத்துவார். தென்னாஃப்ரிக்க அணி கோலி கேப்டன்ஷிப்பில் இந்தியாவுக்கு வந்தபோது ஸ்பின் சாதகமான ஆடுகளங்களில் ஸ்பின்னர்களை சிறப்பாகப் பயன்படுத்தினார். நிலைமைக்கு ஏற்ப பேஸர்களையும் ஸ்பின்னர்களையும் பயன்படுத்துவது தான் கோலியின் சிறப்பம்சம்.அதனால்தான் இவர்கள் இருவரும் சிறந்த கேப்டன்களாக ஆனார்கள்” என்றார்.
காரணம் என்ன?
கேப்டனாக இருந்தபோது பேட்டிங்கிலும் அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 இன்னிங்ஸில் 54.80 சராசரியுடன் 5864 ரன்கள் குவித்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும். தொடர்ந்து பேசிய கையிப், “தோனியும் விராட்டும் ஏன் இவ்வளவு வெற்றிகரமான கேப்டன்களானார்கள்? தோனி வீரர்களுக்கு முழு ஆதரவு கொடுத்து, அவர்கள் வசதியாக உணரும் சூழலை உருவாக்கினார்.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ரிஷப் பண்ட்,ருதுராஜ்க்கு அணியில் இடம் கிடைக்குமா? கேப்டன் ராகுல் ஓபன் டாக்
ஆடுகளத்தை சரியாகப் படிக்கும் திறன் அவருக்கு இருந்தது. ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச்சுகளிலும், ஜடேஜா, பிரக்யான் ஓஜா, அஸ்வின் போன்றோரை சிறப்பாகப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். டாஸுக்கு வரும்போதோ, அணியை வழிநடத்தும்போதோ அவரது இருப்பே பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியது. தோனி கேப்டன்ஷிப்பில் வீரர்கள் எல்லோரும் சொந்த மைதாங்களில் ஆடுவது போல உணர்ந்தார்கள். அதனால் கிட்டத்தட்ட அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். அதனால்தான் தோனி 6 ஆண்டுகளில் சொந்த மண்ணில் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோற்றார்,” என்று முகமது கைஃப் தெரிவித்தார்.






