தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்டை மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்று இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் காயமடைந்த நிலையில், நம்பர் 4 இடத்தில் இந்திய அணிக்கு காலியிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை நிரப்ப பல வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
கார் விபத்துக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பிய பிறகு ரிஷப் பண்ட் வெறும் ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். தொடர்ந்து அணியில் இடம் பிடித்தாலும், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மாறியதால் பண்ட்டுக்கு ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பண்ட் தான் கீப்பர்:
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், 2025 சாம்பியன்ஸ் டிராபி முழுவதும் பண்ட் பெஞ்சிலேயே அமர வேண்டியிருந்தது. தற்போது ஷ்ரேயாஸ் ஐயரும் அக்ஸர் படேலும் இல்லாத நிலையில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களைவிட ரிஷப் பண்ட்டுக்கு விளையாட வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ராகுல், “ரிஷப்க்கு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஆடும் திறமை உள்ளது. ஆனால் நாளை பார்க்கலாம். அவன் ஆடினால் நிச்சயம் விக்கெட் கீப்பராக செயல்படுவார். ஆனால் அதை நாளை தான் முடிவு செய்வோம். ருதுராஜ் கெய்க்வாட் அபாரமான வீரர். நமது ஒருநாள் அணியின் டாப் 5-6 மிகவும் செட்டில் ஆகிவிட்டது. ஆனாலும் அவருக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் நன்றாகவே ஆடியுள்ளார்.”
ருதுராஜ்க்கு வாய்ப்பு:
” இந்தத் தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க ஆவலாக உள்ளோம்.நான் 6ஆம் இடத்தில் ஆடுவேன். அங்குதான் சமீப காலமாக ஆடி வருகிறேன்.அணி அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்புதான் எனக்கு கேப்டன்சி கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னரும் நான் கேப்டனாக இருந்திருக்கிறேன். பொறுப்பு எனக்கு எப்போதும் பிடிக்கும்.”
இதையும் படிங்க: விராட் கோலியுடன் டிரெஸ்ஸிங் ரூமில் அது பத்தி பேசறோம்.. முன்னேறிப் போய் ஆகணும் – கேஎல் ராகுல் பேட்டி
” ரோஹித், விராட், ஜடேஜா போன்ற சீனியர்கள் என்னோடு இருப்பதால், கூட்டு முயற்சி உடன் செயல்படுவோம்” என்றார் . இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அதில் 6 போட்டிகள் தென்னாஃப்ரிக்காவுக்கு எதிராக தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தொடரில் 0-3 என்று தோல்வியடைந்தாலும், அதற்குப் பிறகு கடைசி 9 போட்டிகளில் வெறும் ஒரு தோல்வி மட்டுமே இந்தியா பெற்றது.






