இந்திய கிரிக்கெட்

534 ரன் டார்கெட்.. விராட் கோலி அதிரடி சதம்.. ஆஸியில் யாரும் செய்யாத சாதனை.. பெர்த் முதல் டெஸ்ட்

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடிக்க 534 ரன்கள் டார்கெட் வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் தான் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டும் எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 104 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஜெய்ஸ்வால் விராட் கோலி அபார சதம்

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து வலிமையான தொடக்கத்தை இருவரும் ஏற்படுத்தி தந்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதைத்தொடர்ந்து படிக்கல் 25, ரிஷப் பண்ட் 1, துருவ் ஜுரல் 1, வாஷிங்டன் சுந்தர் 29, ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இன்னொரு முனையில் விராட் கோலி அபாரமாக விளையாடி 143 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்தார். இது அவருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது சதமாகவும்,ஒட்டுமொத்தமாக இது 81வது சதமாக அமைந்தது. இதை தொடர்ந்து இந்திய அணி 6 விக்கெட் 487 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு சரிவு

இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனி 0, பேட் கம்மின்ஸ் 2, லபுசேன் 3 என சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார்கள். ஆஸ்திரேலியா அணி தற்போது 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இன்னும் ஏழு விக்கெட் கைவசமும் இரண்டு நாட்கள் இருக்க அந்த அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது உம்ரா இரண்டு முகமது சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 150 ரன்னில் சுருண்டோம்.. அடுத்து நாங்க இந்த பிளான்தான் செய்தோம்.. கேப்டன் பும்ரா மாற்றினார் – அபிஷேக் நாயர் பேட்டி

ஆஸ்திரேலியா மண்ணில் சச்சின் 6, கவாஸ்கர் 5 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார்கள். விராட் கோலி இந்த சதத்தின் மூலம் சச்சின் சாதனையை உடைத்து ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா மண்ணில் அவருக்கு இது பத்தாவது சர்வதேச சதமாக அமைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

- Advertisement -
Published by
Tags: Virat kohli

Recent Posts