150 ரன்னில் சுருண்டோம்.. அடுத்து நாங்க இந்த பிளான்தான் செய்தோம்.. கேப்டன் பும்ரா மாற்றினார் – அபிஷேக் நாயர் பேட்டி

0
582
Abhishek

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்து சுருண்ட பிறகு என்ன திட்டம் இரண்டாவது இன்னிங்ஸில் தீட்டப்பட்டது என்பது குறித்து இந்திய துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசியிருக்கிறார்.

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணியை விட 452 க்கும் மேல் முன்னிலை பெற்று விளையாடிக் கொண்டு வருகிறது. முதல் இன்னிங்ஸில் 150 ரன் மட்டும் எடுத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி மீண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

கேஎல்.ராகுல் பாணியில் இந்திய அணி

இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக வந்த கேஎல்.ராகுல் பந்துகளை சிறப்பாக விட்டு விளையாடினார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்த பொழுது சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். ஆனாலும் அவர் விளையாடிய முறை மிகவும் சரியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்பொழுது கேஎல்.ராகுல் பாணியில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவருமே தேவையற்ற பந்துகளை வெளியே விட்டு விளையாடினார்கள். இது இந்திய அணிக்கு மிகச் சிறப்பான முறையில் கை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

நாங்கள் செய்த முடிவு இதுதான்

இதுகுறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “முதல் இன்னிங்ஸில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி இருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால் முதல்முறையாக விளையாடுகிறார். முதல் இன்னிங்ஸ் விளையாடிய பிறகு நாங்கள் அது குறித்து மதிப்பீடு செய்து எங்கள் திட்டத்தைச் சுற்றி விவாதித்தோம்”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் இதனால இன்னொரு சச்சின்.. ஒரே நேரத்துல 4 வேலை செய்வார் – ஆஸி முன்னாள் கோச் பேட்டி

“இதன் பிறகு நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்பொழுது நிறைய பந்துகளை விட்டு விளையாடுவது என்று முடிவு செய்தோம். இதன் காரணமாக நாங்கள் நீண்ட ஒரு இன்னிங்ஸ் விளையாடுவதற்கு எங்களை தயார் செய்து கொண்டோம். கேப்டன் பும்ரா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரின் பேச்சும் நம்பிக்கை பற்றியானதாக இருந்தது. இந்த திட்டம் எங்களுக்கு நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -