விராட் கோலி விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை உடைத்து பாபர் ஆஸம் புதிய உலகச் சாதனை!

0
409
Babar

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடி வருகிறது!

இந்த நியூசிலாந்தின் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளையும் அபாரமாக வென்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தொடரின் நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆஸம் 117 பந்துகளில் பத்து பவுண்டரி உடன் 107 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் பாகிஸ்தான அணி குவித்தது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் இன்று எடுத்த ரன்களின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலகச் சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

பாபர் ஆஸம் இந்த உலக சாதனையை 97 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் மூலம் படைத்திருக்கிறார். இதன் மூலம் 101 இன்னிங்ஸ்களில் 5000 கண்களை எட்டி உலக சாதனை படைத்திருந்த தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் அசிம் ஆம்லாவின் உலகச்சாதனை உடைக்கப்பட்டு இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டிய ஐந்து வீரர்கள்.

பாபர் ஆஸம் – 97
அசிம் ஆம்லா – 101
விவியன் ரிச்சர்ட்ஸ் – 114
விராட் கோலி – 114
டேவிட் வார்னர் – 115