7 மாதங்கள்.. ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி ரோஹித் சர்மா.. உண்மையில் தடுமாறுகிறார்களா?

0
74
Virat

இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து வெளியேறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மார்ச் மாதம் ஆரம்பத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசியாக விளையாடி இருந்தார்கள். இதற்கு அடுத்து 7 மாதங்கள் கழித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அசத்தல்

இந்த முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்தில் நடக்கிறது. மேலும் தற்போது வானம் மேகமூட்டமாகவும் மழை வந்து கொண்டும் இருக்கிறது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இதன் காரணமாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்.

- Advertisement -

ஏமாற்றிய ஜாம்பவான்கள்

இந்த நிலையில் முதல் விக்கெட்டாக ஹேசில்வுட் பந்துவீச்சில் ரோகித் சர்மா 14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து வந்த விராட் கோலி 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் கில் நாதன் எல்லீஸ் பந்துவீச்சில் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : கில் தற்காப்பு கேப்டனா?. அல்லது தாக்குதல் கேப்டனானு இது மூலமா ஆஸி தொடரில் தெரியும்.. முகமது கைஃப்

இரண்டு பெரிய ஜாம்பவான் வீரர்கள் விளையாடுவதை பார்ப்பதற்கு இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலிய ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் இருவருமே பந்துவீச்சுக்கு அதிகபட்ச சாதகமான நிலைமையில் ஆட்டம் இழந்ததால், அடுத்து வரக்கூடிய போட்டியில் நன்றாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். எனவே இதை கவலையாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -