கில் தற்காப்பு கேப்டனா?. அல்லது தாக்குதல் கேப்டனானு இது மூலமா ஆஸி தொடரில் தெரியும்.. முகமது கைஃப்

0
27

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இது சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் இந்த தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சுப்மான் கில் தலைமையிலான ஒரு நாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதனால் இந்த தொடர் ஆனது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே வேளையில் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை பலமாகவே காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் முகமது கைஃப், குல்தீப் யாதவை இந்தத் தொடரில் விளையாட வைக்க வேண்டும் என்று அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தத் தொடரில் உண்மையான சோதனை கேப்டன் பொறுப்பில் தான் உள்ளது. அவருக்கு பும்ரா, ஷமி என்று இருவருமே கிடையாது. அவர் குல்தீப்பை விளையாட வைக்கவில்லை என்றால் அது பெரிய தவறாகிவிடும். ஹெட் மற்றும் மார்ஸ் போன்றவர்கள் மூன்று பந்துவீச்சாளர்களை கண்டு பயப்படுவார்கள். அது பும்ரா, ஷமி மற்றும் குல்தீப். இதனால் குல்தீப்பை விளையாட வைக்காவிட்டால் அதைவிட பெரிய தவறு ஒன்று இருக்க முடியாது.

இதையும் படிங்க:விராட் ரோஹித் எங்க இடத்துல நல்லா ஆடாதிங்க.. சும்மா மக்களுக்காக ஆடுங்க – மிட்சல் மார்ஸ் பேட்டி

அவர் ஒரு பாதுகாப்பான கேப்டனாக இருக்க விரும்புகிறாரா அல்லது தாக்குதல் கேப்டனாக இருக்க விரும்புகிறாரா என்று இதன் மூலம் தெரிந்து விடும்” என்று அவர் பேசி இருக்கிறார். இதற்குப் பின்னர் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது சூரிய குமார் யாதவ் தலைமையில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -