இன்று முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி நாளை தங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மான்கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்பி சிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
8 நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இன்று முதல் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக ஏறக்குறைய 90 சதவீத வீரர்களை இந்த ஆசிய கோப்பை தொடரில் நிர்ணயம் செய்துவிடும். இந்த சூழ்நிலையில் இந்திய அணி நாளை தங்களது முதல் போட்டியை ஓமன் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
சூரியகுமார் யாதவ் கேப்டனாக தலைமை தாங்கும் இந்த அணியில் துணை கேப்டனாக ஏற்கனவே டெஸ்ட் கேப்டன் பதவியில் இருக்கும் சுப்மான் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தொடக்க வீரர் என்பதால் ஏற்கனவே தொடக்க இடத்தில் விளையாடி வரும் சஞ்சு சாம்சனின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்துவீச்சாளர் ஆர்பி சிங் சஞ்சு சாம்சனை விட கில் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் குறைவானவர் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் நிலையில் இதை இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்றும் தனது கேள்வியை எழுப்பியிருக்கிறார். விக்கெட் கீப்பர் வரிசையில் வரும் சாம்சன் இந்த தொடரில் மிடில் வரிசையில் பேட்டிங் செய்வார் என்று தருகிறது. இந்த நிலையில் ஆர்பி சிங் இது குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்திய அணியில் இன்னொரு தலைவலி உள்ளது. கில் ஏற்கனவே துணை கேப்டனாக இருப்பதால், அவர் இந்திய அணியில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிப்பார் என்று தருகிறது. அவர் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராகவும் அதிரடி இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். போட்டியில் அதே வேளையில் சுழற்றி விளையாடக்கூடிய வீரரும் உங்களுக்கு தேவை. ஆனால் துணை கேப்டனின் ஸ்ட்ரைக் ரேட் சஞ்சு சாம்சுங் இன் ஸ்ட்ரைக் ரேட் அளவுக்கு சிறப்பானதாக இல்லை.
இதையும் படிங்க:ஆசிய கோப்பையில் வெடித்த முதல் சர்ச்சை.. சூர்யகுமார் செய்த செயல்.. ரசிகர்கள் கோபம்.. இது தேவையா?
இது இந்திய அணிக்கு சவாலா? அல்லது கில்லின் பேட்டிங் நுணுக்கத்தை பயன்படுத்தி இந்திய அணி ஒரு புதிய காம்பினேஷனை உருவாக்க விரும்புகிறதா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடரில் வில்லுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 139 ஆக இருக்கும் நிலையில் இந்த தொடரின் மூலம் இதனை அவரால் மேம்படுத்த முடியும். நான் தற்போது டி20 இந்திய அணியை பேசிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதே வேலையில் அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்” என்று அவர் பேசி இருக்கிறார்.






