மகத்தான சாதனை படைக்க ரோகித், கோலிக்கு வாய்ப்பு.. விவரம் இதோ

0
315

ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும். மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு செல்ல இந்திய அணிக்கு மேலும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மிகப்பெரிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. விராட் கோலி இந்தியாவில் தனது 200 வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்று களமிறங்குகிறார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரகளை விராட் கோலி சேர்த்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மைல் கல்லை அவர் எட்ட உள்ளார்.

விராட் கோலி இன்னும் 77 ரன்களை சேர்த்தால் அவர் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதேபோன்று விராட் கோலி, ரோகித் சர்மா ஜோடி இன்னும் 44 ரன்கள் சேர்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெறும். தனது 200வது போட்டியில் சொந்த மண்ணில் விளையாடும் விராட் கோலி இரட்டை சதம் விளாசி சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளார். ரோகித் சர்மா மேலும் 45 ரன்கள் சேர்த்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ,ராகுல் டிராவிட், கங்குலி ,தோனி, சேவாக் ஆகியோர் அடங்கிய ஜாம்பவான்கள் பட்டியலில் ரோகித் சர்மாவும் சேர்ந்து கொள்வார்.

- Advertisement -

இதேபோன்று ரோகித் சர்மா இன்னும் 57 ரன்களை சேர்த்தால் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதேபோன்று ரோகித் சர்மா இன்னும் 80 ரன்கள் சேர்த்தால் கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப சரியான மைதானமாக இந்தூர் விளங்கும்.

மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதனால் இம்முறை இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்திய  ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்வது தான் கூடுதல் சாதகத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.