ஐபிஎல் 2025

பாபர் அசாம் தேர்ந்தெடுத்த உலக டி20 அணி.. விராட் பும்ராவுக்கு நடந்த காமெடி.. இந்திய ரசிகர்கள் கோபம்

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் உலக டி20 அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணி யுஏஇ-யில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. இன்று டி20 தொடரின் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் ஓதிக்கொள்ள இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவுக்கு சிறப்பு

பாபர் அசாம் உலக டி20 அணியை தேர்வு செய்திருக்கிறார். இதில் துவக்க வீரர்களாக இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தன்னுடைய பார்ட்னர் முகமது ரிஸ்வான் இருவரையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார். மூன்றாவது இடத்திற்கு பாகிஸ்தானின் பஹார் ஜமானை கொண்டு வந்திருக்கிறார். அதே சமயத்தில் இந்த அணியில் தன்னை அவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அடுத்த மூன்று இடங்களுக்கு இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ், இங்கிலாந்து டி20 கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதில் பேட்டிங் யூனிட்டில் விராட் கோலிக்கு பாபர் அசாம் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூன்றாவது இடத்தில் தன் நாட்டின் பஹார் ஜமானை வைத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா பக்கம் சாய்வு

இதற்கு அடுத்து பவுலிங் யூனிட்டில் வேகப்பந்து வீச்சு தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் மார்க்கோ யாான்சன், ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்தின் மார்க் வுட் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் தலைசிறந்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இடமில்லை என்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிய நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. இந்த 3 டீம் நல்லா ஆடுது.. ஆனா கப் இந்த டீமுக்குதான்.. காரணம் இதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

பாபர் அசாம் டி20 உலக அணி: ரோஹித் சர்மா, முகமது ரிஸ்வான், ஃபஹர் ஜமான், சூர்யகுமார் யாதவ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ரஷித் கான், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மற்றும் மார்க் வுட்.

- Advertisement -
Published by