ஐபிஎல் 2025.. இந்த 3 டீம் நல்லா ஆடுது.. ஆனா கப் இந்த டீமுக்குதான்.. காரணம் இதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

0
156
Raina

நடப்பு 2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என்பது குறித்து தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அதிகரித்த பதட்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று மீண்டும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே துவங்குகிறது.

- Advertisement -

கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து நான்கு தோல்விகளுடன் ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்குப் பிறகு மிகச் சிறப்பாக விளையாடி முன்னே வந்தது. தற்போது மீதமிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் பல வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய நிலையில் காணப்படுகிறது.

மேலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 11 போட்டியில் பதினாறு புள்ளிகள் எடுத்து முதல் இரண்டு இடங்களில் வருவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்த நான்கு அணிகளும் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பிலும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த அணி கோப்பையை வெல்லும்

இது குறித்து பேசி இருக்கும் சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வித்தியாசமான முறையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இவர்கள் தங்களது சொந்த மைதானத்தில் 150 மற்றும் 136 ரன்களை பாதுகாத்து இருக்கிறார்கள். இவர்களுடைய பந்துவீச்சுப் பிரிவு முடிக்கி விடப்பட்டுள்ளது”

இதையும் படிங்க : ஆஸிக்கு செக்.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி காரியம்.. வெளியான 2 முடிவுகள்.. திரும்ப வரோம்னு சொல்லு

“மேலும் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியை இரண்டு போட்டிகளிலும் வென்று இருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூம் பாசிட்டிவாக இருந்து வருகிறது. மேலும் இவை அனைத்து வழிகளிலும் செல்லக்கூடிய கோப்பையை வெல்லக்கூடிய அணியின் அடையாளங்களாக இருக்கிறது. எனவே 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று ஆர்சிபி புதிய வரலாறை படைக்கப் போகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -