இந்திய கிரிக்கெட்

நான் முன்னவே சொல்லிட்டேன்.. கம்பீர் இந்த வீரருக்கு வாய்ப்பு தராதது முட்டாள்தனம் – மைக்கேல் கிளார்க் ஆவேசம்

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் பிளேயிங் லெவனில் இருந்து முன்னணி ஸ்பின்னர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்த காரணத்திற்காக, அடுத்த போட்டிகளுக்கான பிளேயிங் 11-ல் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வெளியில் உட்கார வைக்கப்பட்டார்.

​இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசும்போது “குல்தீப் யாதவ் குறித்து நான் ஏற்கனவே எனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்து விட்டேன். அவர் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவிலலை. அவரை ஆட வைக்காதது முட்டாள்தனமான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர் “அவர் விக்கெட் எடுக்கும் ஒரு பௌலர், எந்த வடிவமாக இருந்தாலும் எதிரணியை ஆல் அவுட் செய்யவே நீங்கள் பார்க்க வேண்டும். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல கேப்டன்கள் குறிப்பிட்ட விதிகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அடிக்கட்டும், நாம் அதை சேஸ் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்களே தவிர, எதிரணியை ஆல் அவுட் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by