இந்திய கிரிக்கெட்

இங்க யாரும் ஒரு நொடி கூட வீணாக்க கூடாது.. நீங்க எல்லாரும் இத செஞ்சே ஆகணும் – விராட் கோலி ஆர்டர்

நேற்று ஆர்சிபி அணியின் பயிற்சியின்போது நட்சத்திர வீரர் விராட் கோலி அணியினருக்கு முக்கிய அறிவுரை கூறும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று நடப்புச் சாம்பியன் ஆக இந்த முறை வந்துள்ளது. தற்போது அவர்களுக்கு நல்ல அணி அமைந்துள்ள காரணத்தினால் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதுவரை இல்லாத விஷயம்

தற்போது முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எல்லா இடங்களுக்கும் வலிமையான சரியான வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பேட்டிங் யூனிட்டில் பினிஷிங் செய்வதற்கு சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது பெரிய பலமாக மாறி உள்ளது.

மேலும் மேல் வரிசையில் வழக்கம் போல் ஆர்சிபிக்கு அதிரடி துவக்கம் தருவதற்கு வீரர்கள் அமைந்திருக்கிறார்கள். எனவே ஆர்சிபி தற்போது பலமான அணியாக உள்ளது. விராட் கோலி அணிக்கு வந்ததும் வீரர்களை ஓய்வெடுக்க விடவே மாட்டார் என முன்னாள் வீரர்கள் கூறி வந்தார்கள். தற்போது விராட் கோலி அதை ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

நொடி கூட வீணாக்க கூடாது

நேற்று பயிற்சியில் பேசிய விராட் கோலி கூறும்போது “நாம் கடந்த இரண்டு மூன்று சீசர்களாக மிகவும் கடுமையாக உழைத்து கடந்த முறை செய்த சாதனையை செய்திருக்கிறோம். அது இன்னும் கடினமானதாக நமக்கு மாறப்போகிறது. ஏனென்றால் மற்ற அணிகள் நம்மை எதிர்த்து மிக தீவிரமாக போட்டியிடப் போகின்றன”

இதையும் படிங்க : தொடர்ந்து 3 டக் அடிச்சேன்.. அப்ப நண்பன் கில் சொன்ன வார்த்தைதான் காப்பாத்துச்சு – அபிஷேக் ஷர்மா தகவல்

“நாம் இந்த நாட்களை வீணடிக்க மாட்டோம். எப்போதும் உன் நிலையில் இருப்போம். அதனால் இப்போது இருந்தே முழு கவனத்துடன் செயல்படுங்கள். நாம் கலந்து கொள்ளும் பயிற்சி அமர்வில் ஒரு நிமிடம் கூட வீணாக கூடாது. அடுத்த இரண்டரை மாதங்களுக்கு நாம் 120% உழைப்பை கொடுக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய முகத்தை பார்க்கும் பொழுது நாம் போட்டியாளராக இருக்க முடிவதற்கான உற்சாகம் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts