தொடர்ந்து 3 டக் அடிச்சேன்.. அப்ப நண்பன் கில் சொன்ன வார்த்தைதான் காப்பாத்துச்சு – அபிஷேக் ஷர்மா தகவல்

0
3
Abhishek

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் மூன்று கோட்டிகளில் தான் தொடர்ந்து டக் அவுட் ஆன பொழுது, தன்னுடைய நண்பர் சுப்மன் கில் என்ன அறிவுரை கூறினார்? என்பது குறித்து அபிஷேக் சர்மா பேசியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தான் களம் இறங்கிய முதல் மூன்று போட்டியில் தொடர்ந்து டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அவருக்கு மோசமான சூழல் உருவானது.

- Advertisement -

கில்லிடம் கேட்கப்பட்ட கேள்வி

அபிஷேக் சர்மா மற்றும் கில் இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தவர்கள். மேலும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருவருமே இருந்தார்கள். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவுக்கு என்ன ஆலோசனை கூறினீர்கள் என கில்லிடம் கேட்கப்பட்டது.

இதற்கு முதலில் பதில் அளித்து பேசிய கில் ” சர்வதேச டி20 கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை” என அபிஷேக் சர்மாவை உயர்த்தி வைத்து பதில் கூறினார்.

- Advertisement -

அபிஷேக் சர்மா தந்த பதில்

அதே சமயத்தில் இதுகுறித்து பதில் அளித்துள்ள அபிஷேக் சர்மா பேசும் பொழுது “நான் தொடர்ந்து மூன்று டக் அவுட் ஆனதும் முதலில் கில்லுக்குதான் தொலைபேசியில் அழைத்து என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் அதற்கு ‘நீயே இதை சரி செய்து கொள்ள முடியும்’ என்று கூறிவிட்டார்”

இதையும் படிங்க: விராட் கோலியை ஆர்சிபி அணியில் எந்த வீரரும் இந்த விஷயத்தில் ஏமாற்ற முடியாது.. அவர் விடவே மாட்டார் – முகமது கைஃப் பேச்சு

“அவர் சொன்னது சிறிய வார்த்தை தான். ஆனாலும் அது எனக்குள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒருவேளை அப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால் என்னுடைய மோசமான சாதனை இன்னும் பெரியதாக கூட மாறியிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -