“விராட் கோலி 50 சதம்.. இந்த ரெக்கார்ட பாபர் அசாம் உடைப்பார்!” – கம்ரன் அக்மல் கணிப்பு!

0
2738
Virat

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதில் மிகவும் குறிப்பிடக்கூடிய சம்பவங்களாக ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் அடித்துள்ள அதிகபட்ச சதங்களாக இருந்த 49 சத சாதனையை, கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி சமன் செய்தது இருக்கும்.

- Advertisement -

மேலும் மிக முக்கிய சம்பவமாக அடுத்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் ஐம்பதாவது சதத்தை அடித்து சச்சினின் சாதனையை முறியடித்தது இந்திய ரசிகர்களுக்கு மனதில் பதிந்திருக்கும்.

இன்னும் குறைந்தது விராட் கோலி 3 முதல் 4 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார். அவர் அடுத்து தென் ஆப்பிரிக்காவில் நான்கு வருடம் கழித்து நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடவும் செய்யலாம்.

எனவே இப்படியான காரணங்களால் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் சத எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். எனவே அவரை துரத்திச் சென்று பிடிக்க வேண்டும் என்றால், விளையாடும் திறமை மட்டுமே போதாது. மேலும் அவர் 40 வயது வரைக்கும் விளையாடுவதற்கு உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாரோ அதுவும் முக்கியம். இல்லையென்றால் நீடிக்க முடியாது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி சாதனையை வைத்து பாபர் அசாமை குறிப்பிட்டு பேசி உள்ள கம்ரன் அக்மல் கூறும்பொழுது “விராட் கோலியின் சாதனையை முதல் மூன்று இடங்களில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் முடியாது. இந்தச் சாதனையை முறியடிக்க எங்களிடம் பாபர் அசாம் இருக்கிறார். இதை துரத்துவதற்கு இந்திய அணியில் கில் இருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!

மேலும் பாபர் அசாம் சம்பந்தமாக பேசி உள்ள ஷாகின் ஷா அப்ரிடி கூறும் பொழுது ” உங்களில் உண்மையான தலைமையின் கீழ் குழு பணியில் இணைந்து விளையாடிய ஒரு சாட்சியாக இருப்பது மகிழ்ச்சி. உங்களுடைய தலைமைத்துவம், குழு ஒற்றுமை, வெற்றிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. நீங்கள் இன்னும் பல பேட்டிங் சாதனைகளை முறியடிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் பாபர் அசாம் விலகிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வீரராக அடுத்து வரும் கேப்டனுக்கும், அணிக்கும் தான் எல்லா ஒத்துழைப்பையும் தரத் தயாராக இருப்பதாக அவர் தன்னுடைய விலகல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்!