டி20 தொடரில் இருந்து விராட் கோலி தற்காலிக ஓய்வு- உண்மையான காரணம் இதுதான்!

0
675
virat kholi

இலங்கை அனியானது வருகிற ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது அந்த அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது .

இந்தப் போட்டி தொடருக்கான அணிகளை பிசிசிஐ நாளை வெளியிடும் என்று தெரிகிறது.பங்களாதேஷ் ஒருநாள் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய கேப்டன் ரோஹித் சர்மா டி20 அணியில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே . மேலும் காயத்திலிருந்து குணமடைந்து என்சிஏ வில் பயிற்சி பெற்று வரும் ரவீந்திர ஜடேஜா இந்தத் தொடருக்கான அணிகளில் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

கே எல் ராகுல் ஏற்கனவே இந்த தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டி20 போட்டி தொடரிலிருந்து தனக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ கேட்டுக
கொண்டுள்ளார். இதனால் விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது . 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கு முன்பாக விராட் கோலி எந்த t20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன .

அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தற்போது அதிக கவனம் செலுத்துவார் என்றும் ஐபிஎல் தொடருக்குப்பின் டி20 போட்டிகளில் ஆடுவது பற்றி முடிவெடுப்பார் என்றும் செய்திகள் கூறுகின்றன. இதனால் ஒருவேளை விராட் கோலி t20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .தற்போது விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்து இருப்பதால் தேர்வாளர்களுக்கு தலைவலி குறைந்தது என்றே கூறலாம் .

இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்றும் டி20 மற்றும் ஒரு நாள் அணிகள் நாளை அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிசப் பண்ட் தற்போது துபாயில் இருப்பதால் அவரும் டி20 காண அணியில் இடம் பெறுவது சந்தேகம்தான் . இதனால் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் .

- Advertisement -

ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணியானது ஒரு வலுவான அணியுடனே இலங்கை அணியை எதிர்கொள்ளும் . 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது இருந்தே அதற்கு தயாராகும் முயற்சியில் இந்திய அணி ஈடுபட உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.