வீடியோ:ஆக்ரோஷத்துடன் ஐம்பது ரன்களை கொண்டாடிய விராட் கோலி!

0
121

16வது ஐபிஎல் சீசன் இன் இருபதாவது கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது புள்ளிகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி பத்தாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணியுடன் மோதுகிறது .

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வழக்கம்போலவே ஆர்சிபி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தாலும் பாப் டுப்ளசிஸ் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட் இருக்கு லோம்ரார் உடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி.

- Advertisement -

லோம் ரார் ஒரு முனையில் விக்கெட் விழாமல் ஆட மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக ஆடி ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர உதவினார். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட் இருக்கு சிறப்பாக ஆடி ஆர் சி பி அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர் .

விராட் கோலி இந்த தொடரின் துவக்கத்திலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். கொல்கத்தா அணியுடன் நான் இரண்டாவதாக ஆட்டம் தவிர்த்து மற்ற எல்லா போட்டிகளிலும் அபாரமாக ஆடி அரை சதம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இன்று நடைபெற்ற போட்டியிலும் விராட் கோலி 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவதாரை சதத்தை பதிவு செய்தார்.

தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்த விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். 50 ரன்கள் எடுத்தவுடன் சீற்றத்துடன் தனது அரை சதத்தை விராட் கோலி கொண்டாடியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி இதுபோன்று ஆக்ரோசமாக 50 ரன்கள் கொண்டாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தற்போது இன்றைய போட்டியில் அவரிடமிருந்து ஆக்ரோஷம் வெளிப்பட்டிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 34 பந்துகளில் ஏழு போண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி லலித் யாதவ் வந்து வீட்டில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் தனது அதிரடியின் மூலம் ஆர் சி பி அணியின் ரன்கள் உயர உதவினார். குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆர்சிபி அணி தற்போது 17 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது.