வீடியோ: பயிற்சியின்போது விராட் கோலிக்கு பெருத்த அடி; ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் நேர்ந்த சோகம்!

0
2637

பயிற்சியின்போது விராட் கோலியின் தொடை பகுதியில் அரசியல் பெட்டில் பேசிய பந்து பட்டதால் காயம் சற்று அதிகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டி வருகிற 9 மற்றும் 10ம் தேதி நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னி மைதானத்திலும், நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்திலும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன.

இந்திய அணிக்கு போட்டி நாளை என்பதால், இன்று மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்து அணியும் அடிலெய்டு மைதானத்தின் மற்றொருபுறம் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இன்று வலைப்பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஹர்ஷல் பட்டேல் பந்துவீசி வந்தார். அப்போது ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்து விராட் கோலியின் தொடைப் பகுதியை பதம் பார்த்தது.

பந்து பட்டவுடனேயே பெருத்த வலியுடன் கீழே சாய்ந்தார் விராட் கோலி. அதன் பிறகு எழுந்து நிற்க முயற்சித்து முடியவில்லை என்பதால் உடனடியாக மருத்துவ குழுவினரை அழைத்தார்.

அவரை பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் உடனடியாக அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் பாதியிலேயே பயிற்சியிலிருந்து விராட் கோலி வெளியேறியுள்ளார். தற்போது வரை அவருக்கு எவ்வித அசவுகரியமும் இல்லை என்ற தகவல் வந்திருக்கிறது. தொடைப்பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து வருகின்றனர்.