பயிற்சி ஆட்ட தோல்விக்குப் பிறகு விராட் – டிராவிட் நீண்ட ஆலோசனை – வீடியோ இணைப்பு

0
372
Viratkohli

அக்டோபர் 22-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது.

இந்தியாவிலிருந்து கிளம்பிய இந்திய அணி நேராக மேற்கு ஆஸ்திரேலியா சென்று அங்கு அமைந்துள்ள பெர்த் மைதானத்தில் தனது முதல் பயிற்சியை ஆரம்பித்தது.

- Advertisement -

பெர்த் மைதானம் மேற்கு ஆஸ்திரேலிய அணியின் சொந்த மைதானம் ஆகும். எனவே மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் ஆஸ்திரேலிய சூழலைப் பழகுவதற்காக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, மற்றும் அஸ்வின் மூவரும் விளையாடவில்லை.

இரண்டாவது பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா அணியில் இடம் பெற்று இருந்த போதும் கேஎல் ராகுல் அணிக்கு தலைமை தாங்கினார். இந்தப் போட்டியில் அஸ்வின் இடம்பெற்றார். அதே சமயத்தில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ், சாகல் ஆகியோர் இடம்பெறவில்லை.

- Advertisement -

இந்தப் போட்டியில் பந்து வீச்சில் அஸ்வின் மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். பேட்டிங்கில் கேஎல் ராகுல் மட்டுமே அரை சதம் அடித்தார். ரோகித் சர்மா கடைசிவரை மற்றவர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக களமிறங்கவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரண்டு போட்டிகளிலும் களமிறக்கப்படாத விராட் கோலி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். போட்டி முடிந்ததும் நேராக போட்டி நடந்த ஆடுகளத்தில் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

இப்படி தோல்வி அடைந்த போட்டிக்குப் பிறகு விராட் கோலி மைதானத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அதேபோல் இரண்டாவது பயிற்சி போட்டியின் போது ஹர்டிக் பாண்டியா உடன் 20 நிமிடங்கள் விராட் கோலி பேச்சுவார்த்தையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!