வினோத் காம்ப்ளி தேர்வு செய்துள்ள ஆல் டைம் ஃபேப் 4 வீரர்கள் பட்டியல்

0
781
Vinod Kambli Names his Fab 4

ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள் என்றால் அவர்கள் அனைத்துவித கிரிக்கெட் பார்மெட்டிலும் சிறந்து கைதேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
தற்பொதைய கிரிக்கெட் தலைமுறையில் அப்படிப்பட்ட ஃபேபுலஸ் ஃபோர் கிரிக்கெட் வீரர்கள் யார் என்று கேட்டால் அனைவரும் கூறக்கூடிய சாமானிய பதில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர்கள் தான். ஏனென்றால் இவர்கள் அனைவரும் தங்களது அணிக்காக முழு பங்களிப்பை ஒவ்வொரு போட்டியிலும் கொடுத்து வருவார்கள். தனியாளாக இறுதிவரை நின்று தங்களது அணியின் வெற்றிக்காக போராடும் திறமை படைத்தவர்கள்.

ஆனால் இந்தப் பட்டியலில் தற்போது ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடுவதில்லை. சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இந்த பட்டியலில் புதிதாக பாபர் அசாம் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை இணைத்து இருந்தார். அவருடைய கருத்திற்கு பல விமர்சனங்கள் வந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தற்போது புதிய ஃபேபுலஸ் ஃபோர் வீரர்களை தேர்ந்தெடுத்து கூறியுள்ளார்.

- Advertisement -

வினோத் காம்ப்ளி தேர்ந்தெடுத்துள்ள ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள்

வினோத் காம்ப்ளி கூறிய ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர். தன்னைப் பொறுத்த வரையில் இந்த நால்வர் தான் கிரிக்கெட் போட்டியின் சிறந்த ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இவரது கருத்துக்கு ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருதலைப் பட்சமாக 3 இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இது முறையானது அல்ல என்று அவருடைய தேர்விற்கு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் இவர் தேர்ந்தெடுத்தது மிகவும் சரி என்று வரவேற்பு கொடுத்தும் வருகின்றனர். இருப்பினும் வினோத் காம்ப்ளி தேர்ந்தெடுத்துள்ள இந்த நான்கு வீரர்கள் சிறந்த வீரர்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

சுனில் கவாஸ்கர் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்கள் ஆடிய காலகட்டத்தில் எதிரணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்த வீரர்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதேபோல சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி கிரிக்கெட் போட்டியில் அடுக்கடுக்காக பல சாதனைகளைப் படைத்தவர்கள். எனவே இந்த நான்கு கிரிக்கெட் வீரர்கள் ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள் பட்டியலுக்கு மிகவும் தகுதியானவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -