கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு ஆடுகளத்தை மோசமாக தயாரித்ததே காரணம் என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரையில் முதல் 10 போட்டிகளில் தோற்கடிக்கப்படாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எனவே மிக உறுதியாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி மிக எளிதாக இலக்கை எட்டி உலகக் கோப்பையையும் வென்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் மிகவும் மெதுவாகவும் அதே நேரத்தில் பந்து மிகவும் தாழ்வாகவும் வந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு வந்து பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக மாறியது. இதனால் இந்திய அணி நிர்வாகம் ஆடுகளத் தயாரிப்பில் தலையிட்டு இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து அப்போதைய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்கின்ற இந்த கதையை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. இதே போன்ற விக்கெட்டுகளில் நாங்கள் அந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடினோம். இருப்பினும் அகமதாபாத் ஆடுகளம் அவர்கள் விளையாடும் பொழுது எளிதாக மாறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக தயாராக.. ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் இலங்கைக்கு உதவி செய்தது – சனத் ஜெயசூர்யா வெளியிட்ட தகவல்
மிகக்குறிப்பாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்பாக இதே ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அப்போதே அந்த ஆடுகளத்திற்கு ஐசிசி சுமார் என சர்டிபிகேட் கொடுத்திருந்தது. அப்படி இருந்த போதிலும் கூட இதே ஆடுகளத்தில் இந்திய அணி விளையாடியது தான் விமர்சனமானது என்பது குறிப்பிடத்தக்கது.