இலங்கை அணி நாளை மறுநாள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சொந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உதவி செய்ததாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா கூறியிருக்கிறார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி இலங்கை அணி முதல் சுற்றோடு தோல்வி அடைந்து வெளியில் வந்தது. வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலை சாதகமாக இருக்கும் எனவே இலங்கை அணி குறிப்பிட்டத்தக்க அளவில் சாதிக்கும் என்று நம்பி இருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை இலங்கை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வனிந்து ஹசரங்கா பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். தற்பொழுது புதிய கேப்டனாக சரித் அசலங்கா அறிவிக்கப்பட்டிருக்கிறார். சொந்த நாட்டில் விளையாடுகின்ற காரணத்தினால் மேலும் முதலில் டி20 தொடர் என்பதால் ஏதாவது இந்திய அணிக்கு எதிராக சாதிக்க முடியும் என இலங்கை நம்புகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்திறன் இயக்குனராக பணியாற்றி வரும் ஜுபின் பரூச்சாவை வைத்து இலங்கை அணிக்கு ஒரு வாரம் தற்பொழுது பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெய்ஸ்வால் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய அளவில் ஏற்றம் ஏற்படுவதற்கு பின்னால் இவர்தான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு குறிப்பிட்ட வீரரின் செயல் திறனை அதிகரிப்பதில் வல்லவர்.
இதுகுறித்து பேசி இருக்கும் சனத் ஜெயசூர்யா கூறும்பொழுது “லங்கா பிரீமியர் லீக்குக்கு பிறகு நாங்கள் பயிற்சியை தொடங்கினோம். பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் விளையாடியதால் பிசியாக இருந்தார்கள். நாங்களும் முடிந்த வரையில் அவர்கள் பிசியாக கிரிக்கெட்டில் இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங்.. டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்.. ரோகித் கில் சரிவு.. ஏற்பட்ட மாற்றங்கள்
நாங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து செயல்திறன் இயக்குனர் ஜூபின் பரூச்சாவை வரவழைத்தோம். நாங்கள் அவரை வைத்து ஆறு நாட்கள் பயிற்சி பெற்றோம். லங்கா பிரிமியர் லீக்கில் விளையாடி முடித்த வீரர்களும் வந்து இணைந்தார்கள். பயிற்சி மற்றும் நுட்பங்களின் அடிப்படையில் நிர்வாகம் விரும்புவதை வீரர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் புதிய நுட்பங்கள், புதிய அணுகுமுறைகள் மற்றும் ஷாட் மேக்கிங்கில் திறம்பட செயல்படுவது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.