இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடி வரும் இந்திய சைனாமேன் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் எசெக்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் கேரியரில் சிறந்த மேட்ச் ஃபிகர்ஸை பதிவு செய்துள்ளார். மேலும் பேட்டிங்கிலும் 36 ரன்கள் எடுத்து அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் டீமில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இளம் ஸ்பின்னர் மானவ் சுதர் ஆகியோரின் வருகையால் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்து தனக்கான இடத்தை குல்தீப் யாதவ் மீண்டும் வலுவாக உறுதி செய்துள்ளார்.
இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு இந்த ஃபார்ம் மூலம் தான் இன்னும் மேட்ச் வின்னர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு ஸ்ட்ராங் மெசேஜை அனுப்பி இருக்கிறார்.
அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஜடேஜாவும் தனது கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார், இதனால் இந்திய டெஸ்ட் டீமில் ஸ்பின் டிபார்ட்மென்ட்டை வழிநடத்த தான் தயாராக இருப்பதாகவே குல்தீப் யாதவின் இந்த பெர்ஃபார்மன்ஸ் அமைந்திருக்கிறது.