இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா தொப்பையை சுத்தி வட்டம் போட்டு காட்டிட்டாங்க.. அப்பதான் அப்படி ஒரு முடிவை எடுத்தார் – அபிஷேக் நாயர் பேட்டி

​தற்போது உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வரும் நட்சத்திர பேட்டர் ரோகித் சர்மாவின் ஃபிட்னஸ் மாற்றம் குறித்து முன்னாள் உதவி கோச் அபிஷேக் நாயர் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இந்திய தொடருக்கான டீமில் இடம் கிடைக்காதது ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கொண்டு வந்த ஃபிட்னஸ் கலாச்சாரம் பெரியளவில் தொடங்கப்படவில்லை.

​தொடக்க காலத்தில் ரோகித் சர்மா ஜிம் சென்று வொர்க்கவுட் செய்வதை விட தனது பேட்டிங் ஸ்கில் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். ஆனால் 2011 உலகக்கோப்பைக்கு பிறகு தனது ஃபிட்னஸை உயர்த்த கடுமையாக உழைத்து ஐபிஎல் தொடருக்குள் நுழைந்தார்.

​இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும்போது “நாங்கள் இருவரும் நிறைய விவாதிப்போம், நான் அதிகமாக ட்ரைனிங் செய்வேன், அவரோ தனது திறமையை மட்டுமே நம்புவார். ஒருமுறை நியூஸ் சேனல் ஒன்று அவரது புகைப்படத்தை வெளியிட்டு தொப்பியை சுற்றி வட்டம் போட்டு காட்டியது, அந்த இமேஜ் அவர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அபிஷேக் நாயர் “வேர்ல்ட் கப் ஸ்குவாட் அறிவிக்கப்பட்டு அதில் இடம் கிடைக்காத போது நாங்கள் அவர் வீட்டில் இருந்தோம். அடுத்த ஒன்றரை மாதத்தில் வரவிருந்த ஐபிஎல் தொடருக்குள் ஃபோர் பேக் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், சொன்னபடியே ஃபோர் பேக் உடனுடன் ஐபிஎல் தொடரில் களம் இறங்கினார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts