விஜய் சங்கர் அதிரடியில் பாய்ண்ட்ஸ் டேபிள் முதல் இடத்திற்கு முன்னேறிய குஜராத் ; கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது!

0
446
Ipl2023

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன!

மழையால் தாமதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் தனது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 19 ரண்களில் வெளியேறினாலும் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் மிகச் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் எடுத்தார். இறுதியில் வந்த ஆண்ட்ரூ ரசல் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 34 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் 11, கேப்டன் நிதிஷ் ராணா 4, ரிங்கு சிங் 19, சர்துல் தாக்கூர் 0, டேவிட் வீசா 8 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. முகமது சமி நான்கு ஓவர்களுக்கு 33 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு சகா 10, கில் 49, ஹர்திக் பாண்டியா 26 ரங்கல் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். திடீரென்று ஆட்டம் கொஞ்சம் கொல்கத்தா பக்கம் வந்தது.

- Advertisement -

ஆனால் டேவிட் மில்லர் மற்றும் தமிழக வீரர் விஜய் சங்கர் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி 17.5 ஓவர்களில் குஜராத் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தார்கள்.

விஜய் சங்கர் ஆட்டம் இழக்காமல் 24 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்தும், டேவிட் மில்லர் 18 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் எடுத்தும் களத்தில் நின்றார்கள். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் மூன்று ஓவர்களுக்கு 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்!

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகள் பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றது. இதற்கு அடுத்த மூன்று இடங்களில் ராஜஸ்தான், லக்னோ மற்றும் சென்னை அணிகள் இருக்கின்றன!