வீடியோ; 2023 உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்த ஜிம்பாப்வே ரசிகர்கள்!

0
962
Zimbabwe

இந்தியாவில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முழுமையாக நடக்க இருக்கிறது. இந்தத் தொடர் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கிறது!

இதற்கு முன்பாக இரண்டு இடங்களுக்கான போட்டிக்கு ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மாதிரியான அனுபவம் வாய்ந்த அணிகள் தகுதிச் சுற்றில் ஜிம்பாபேவில் விளையாடுகின்றன.

- Advertisement -

இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாவே மற்றும் நேபாள் பணிகளுக்கு இடையேயான போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் குஷால் பர்டேல் 95 பந்தில் 99 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு அனுபவ வீரர்களான அந்த அணியின் கேப்டன் கிரேஜ் எர்வீன் மற்றும் சீன் வில்லியம்ஸ் இருவரும் சதம் அடித்து 44 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அணியை அபார வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டி முடிவடைந்ததும் ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதான ஊழியர்கள் உடன் சேர்ந்து தாங்களும் மைதானத்தை சுத்தப்படுத்தினார்கள். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

80,90களில் ஜிம்பாப்வே அணி உலக கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை வைத்திருந்த அணிதான். பின்பு அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல்களால் அந்த நாட்டின் கிரிக்கெட் பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு மக்களின் கிரிக்கெட் மீதான உணர்வு பாதிக்கப்படவில்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட் தற்போது மீண்டும் எழுந்து வருவதில் அந்த நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இதுவெல்லாம்.