வீடியோ W,W,0,W,0,W.. சென்னை அணியை சுருட்டி வீசிய முகமது அமீர்.. 8.3 ஓவரில் முடிந்த மேட்ச்!

0
1953
Amir

தற்பொழுது அபிதாபியில் நட்சத்திர வீரர்கள் பங்கு பெற்று விளையாடும் டி10 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சரித் அசலங்கா தலைமையிலான சென்னை பிரேவ்ஸ் அணியும், கீரன் பொல்லாத தலைமையிலான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை பிரேவ்ஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இரண்டாவது ஓவரை வந்து வீச வந்தார்.

அமீர் உடைய அந்த இரண்டாவது ஓவரில் மட்டும் ரன்கள் ஏதும் தராமல் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதில் ஒரு ரன் அவுட்டும் அடக்கம். முன்சி, ஹெர்ப்ட், ராஜபக்சே, அசலங்கா என வரிசையாக வெளியேறினார்கள்.

இது மட்டும் இல்லாமல் அவர் தன்னுடைய கடைசி மற்றும் இரண்டாவது ஓவரில் 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்தின் ஜேசன் ராயை கிளீன் போல்ட் செய்து அனுப்பி வைத்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை பிரேவ்ஸ் அணிக்கு எதிராக இரண்டு ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் விட்டு தந்து, ஒரு மெய்டன் செய்து, நான்கு விக்கெட் கைப்பற்றி முகமது அமீர் அசத்தியிருக்கிறார். மேலும் ஒரு ரன் அவுட்டும் செய்திருக்கிறார்.

சென்னை பிரேவ்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒன்பது வீக்கத்துக்கு 75 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் அந்த அணியால் எந்த விதத்திலும் தங்களுடைய தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதற்கு அடுத்து எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய பொல்லார்டு தலைமையிலான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் 8.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பில்லாமல் முகமது அமீர் வெளியில் தள்ளப்பட்டார். ஆனால் அவருடைய வேகப்பந்து வீச்சு எப்பொழுதும் கூர்மை குறையாமல் மிக அபாரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!