வீடியோ.. என்னடா நடக்குது? ஆசிய கோப்பைக்காக தீயில் இறங்கி பயிற்சி பெறும் பங்களாதேஷ் வீரர்!

0
618
Naim

இந்த முறை ஆசிய கோப்பைத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடக்கிறது. கடந்த முறை டி20 வடிவத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற இருப்பதால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இது சிறந்த பயிற்சி தொடராக அமையும்.

இந்தத் தொடர் இந்த முறை இந்தியா பாகிஸ்தான் செல்ல சம்மதிக்காத காரணத்தினால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் முப்பதாம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது.

- Advertisement -

ஆசியக்கோப்பை தொடருக்கான அணியை பங்களாதேஷ் அணி முன்கூட்டியே அறிவித்திருக்கிறது. தமீம் இக்பால் கேப்டன் பொறுப்பில் தொடர விரும்பாத காரணத்தால், அந்த அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஆசியக் கோப்பை தொடருக்கான பங்களாதேஷ் அணி:

பேட்டர்ஸ்: லிட்டன் தாஸ், தன்சித் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், முகமது நயீம் ஷேக்.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள்: தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் நசும் அகமது, இஸ்லாம், எபடோட் ஹொசைன், ஹசன் மஹ்மூத்,

விக்கெட் கீப்பர்: முஷ்பிகுர் ரஹீம்

ஆல்ரவுண்டர்கள்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசைன், அபிஃப் ஹொசைன், மஹேதி ஹசன்.

காத்திருப்பு: தைஜுல் இஸ்லாம், சைஃப் ஹசன், தன்சிம் ஹசன் சாகிப்.

தற்போது ஆசியக் கோப்பை பங்களாதேஷ் அணியில் இடம் பெற்றுள்ள, 23 வயதான இடது கை இளம் பேட்ஸ்மேன் முகமது நயிம் ஷேக், தனது அணியின் மனநல பயிற்சியாளர் உடன் சேர்ந்து, ஆசியக் கோப்பைக்கு தயாராகும் விதமாக வித்தியாசமான பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அவர் அவரது மனநல பயிற்சியாளர் உடன் சேர்ந்து நெருப்பில் இறங்கி நடந்து பயிற்சி பெற்று இருக்கிறார். ஆறடிக்கும் பக்கமான நீளத்திற்கு வளர்க்கப்பட்டுள்ள நெருப்பில் அவர் இறங்கி நடந்து வருகிறார். இது மனதை வலிமையாக்க உருவாக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக அறிமுகமானார். ஒரு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 35 டி20 போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியிருக்கிறார். t20 கிரிக்கெட்டில் மட்டுமே நான்கு அரை சதங்கள் அடித்திருக்கிறார்.