வீடியோ; ஜிம்பாப்வே உடன் டாஸின் போது அஷ்வின் செய்த காரியம்!

0
28080
Rohitsharma

நடப்பு எட்டாவது டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. கடந்த முறை இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி வந்ததற்கு, இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நல்லவிதமாகவே விளையாடியிருக்கிறது!

மிகக் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணியின் விராட் கோலி பழைய ஃபார்முக்கு வந்திருப்பது பெரிய மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருக்கிறது!

அதே சமயத்தில் பேட்டிங்கில் நம்பர் மூன்றாம் இடத்தில் விராட் கோலி நம்பிக்கை உடன் விளையாடும் பொழுது, நான்காவது இடத்தில் சூரியகுமார் வந்து எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து விட்டு போவது, இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது!

இன்னொரு பக்கத்தில் பந்துவீச்சுத் துறையில் 23 வயதான இடது கை இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் மிகச் சிறப்பாக ஆட்டத்தின் எல்லா பகுதி பந்து வீச்சிலும் விளங்கி வருகிறார். இது யாரும் எதிர்பாராத மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இந்திய அணியின் பக்கம் அமைந்திருக்கிறது!

நேற்று ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் ஒரு போட்டியில் மோதியது. இந்த போட்டிக்கான டாசின் போது, இந்திய அணியில் பிரதான சுழற் பந்துவீச்சாளராக ஆடும் அணியில் இடம் பெற்று வரும் அஸ்வின் செய்த ஒரு காரியம் கேமராவில் பதிவாகி, அது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை உருவாக்கி வருகிறது.

அப்படி என்ன பதிவாகி இருந்தது என்றால், அஸ்வின் கையில் அணிந்து கொள்வதற்கான இரண்டு மேலாடைகள் இருந்தது, அதில் எந்த ஆடையில் வியர்வை வாசம் இல்லாமல் இருக்கிறது என்று, அஸ்வின் அந்த ஆடையை முகர்ந்து பரிசோதனை செய்து பார்த்தது, சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் நகைச்சுவைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வீடியோ பலராலும் தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!