ஒரு சிறப்பான சாதனை; ஒரு மோசமான சாதனை; இன்று போட்டியில் ரோகித் சர்மாவுக்கு நடந்த வினோதம்!

0
143
Rohitsharma

ஐபிஎல் 16 வது சீசனின் ஐந்தாவது போட்டி இன்று பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பாப் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிஷான் இருவரும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டி கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு 200வது போட்டியாகும். இந்திய கேப்டன்களில் இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் 200க்கும் மேலான போட்டிகளில் கேப்டனாக தலைமை வகித்திருப்பவர் மகேந்திர சிங் தோனி மட்டுமே. உலக அளவிலும் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி 307 போட்டிகள்
டேரன் சமி 208 போட்டிகள்
ரோகித் சர்மா 200 போட்டிகள்
விராட் கோலி 190 போட்டிகள்
கௌதம் கம்பீர் 170 போட்டிகள்

பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 10 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பூஜ்ஜியம் முதல் 5 ரண்களுக்கு உள்ளாக அதிக முறை ஆட்டம் இழந்தவர் என்ற மோசமான சாதனையை தற்பொழுது ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா 50 போட்டிகள்
தினேஷ் கார்த்திக் 44 போட்டிகள்
ராபின் உத்தப்பா 41 போட்டிகள்
சுரேஷ் ரெய்னா 40 போட்டிகள்

இன்று பெங்களூருக்கு எதிரான மும்பையின் ஆட்டத்தில் மும்பையின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெளியேற ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 46 பந்துகளில் ஒன்பது பவுண்டரி 4 சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் சேர்த்து இருக்கிறது.