வீடியோ.. அடுத்த கபில்தேவ் ராகுல் டிராவிட் மகன்தான் போல.. வேகப்பந்து வீச்சிலும் அசத்தல்!

0
304
Samit

இந்திய கிரிக்கெட்டுக்கு பேட்ஸ்மேன் ஆகவும், கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஆகவும், மேலும் தேவைப்படும் நேரங்களில் விக்கெட் கீப்பராகவும் இருந்து, மிகப்பெரிய சேவையை செய்தவர் ராகுல் டிராவிட்.

இவர் தனது ஓய்வு காலத்திற்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட, அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்திய கிரிக்கெட்டுக்கு இளம் வீரர்களை உருவாக்க, இந்திய இளம் அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இத்தோடு சேர்த்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இதன் மூலம் இளம் வீரர்கள் மட்டுமல்லாது மூத்த வீரர்களையும் அவரால் வழிநடத்த முடிந்தது. இதற்கு அடுத்து இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

இப்படி தான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற காலத்திலும் இந்திய கிரிக்கெட்டோடு எப்பொழுதும் இணைந்திருந்து மிகப்பெரிய சேவையை செய்வதில் அர்ப்பணிப்பை கொண்டவராக இருக்கிறார்.

- Advertisement -

18 வயதான இவரது மகனான சமித் டிராவிடை ஓரளவுக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே அறிந்திருந்தார்கள். ஆனால் அவர் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார் என்பது தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கூச் பெகார் டிராபியின் இறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இதில் இதில் கர்நாடக அணிக்காக சமித் டிராவிட் விளையாடுகிறார்.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்று கர்நாடகா பீல்டிங் செய்ய முடிவு செய்தது. சமித் டிராவிட் மொத்தம் 19 ஓவர்கள் பந்துவீசி, இரண்டு மெய்டன்கள் செய்து, 60 ரன்கள் விட்டுத்தந்து முக்கியமான இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 380 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறது.

இதற்கடுத்து துவங்கும் கர்நாடக அணியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சமித் டிராவிட் எப்படி செயல்படுகிறார்? என்பது மிக சுவாரசியமான விஷயமாக அமையும்.

- Advertisement -