வீடியோ; “என் அண்ணனுக்கு பிறந்தநாள்” தோனிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா!

0
443
Dhoni

இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனமான மகேந்திர சிங் தோனி அவர்களின் 42 ஆவது பிறந்தநாள் வெகு விமர்சையாக சமூக வலைதளத்தில் பல பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கத்தில் சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் மட்டும் என்று இல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் என சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கிறது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி என்பவரை பொறுத்தவரை அவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு கேப்டன் மட்டுமே கிடையாது. அவர் அதைத் தாண்டி தனது செயல்பாடுகளால் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக் கூடியவர். அவரது குண நலன்களை தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஒரு மனிதரால் எடுத்துக் கொள்ள முடியும்.

களத்திற்கு உள்ளேவும் களத்திற்கு வெளியேயும் எந்தவிதமான குணம் மாற்றமும் இல்லாமல், அணியின் மூத்த வீரர்களை ஒருங்கிணைப்பதில் ஆரம்பித்து இளைய வீரர்களை அரவணைப்பது வரை மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டில் செய்திருப்பது ஒரு மிகப்பெரிய பாடமாக வருங்கால கேப்டன்களுக்கு இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் மகேந்திர சிங் தோனி உடன் இணைந்து விளையாடிய மற்றும் இணைந்து விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா இருவரும் மிக நெகிழ்ச்சியாக தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகேந்திர சிங் தோனிக்கு சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்தில்
“எனது பெரிய சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கனவுகளை பகிர்ந்து கொள்வது வரை, நாம் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாதது. உங்களுடைய பலம், ஒரு நண்பராகவும் ஒரு தலைவராகவும் எனக்கு வழிகாட்டும் வெளிச்சம். வரும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்!” என்று வாழ்த்தியிருக்கிறார்!

ரவீந்திர ஜடேஜா தனது பிறந்தநாள் வாழ்த்தில் ” 2009 ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை எனது கோ டு மேன் மகேந்திர சிங் தோனிதான். வாழ்த்துக்கள் மகி பாய். விரைவில் மஞ்சள் ஜெர்சியில் சந்திப்போம்!” என்று கூறியிருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்கள் என்று மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகளும் பிசிசிஐ பிரதிநிதிகளும் மகேந்திர சிங் தோனிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.