வீடியோ; 6, 6, 6, 6, 6 ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட சூப்பர் கிங்ஸ் வீரர்; டை ஆன போட்டி ; ஸ்ரீசாந்த் கடைசி ஓவரில் கலக்கல்!

0
9600
Zimbabwe

ஜிம்பாப்வே நாட்டில் தற்பொழுது 5 அணிகளை கொண்டு ஜிம்பாப்வே ஆப்ரோ டி10 லீக் என்ற பெயரில் 10 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஹராரே ஹரிகேன்ஸ், புலவாயோ பிரேவ்ஸ் என இரண்டு ஜிம்பாப்வே அணிகளும், கேப் டவுன் சாம்ப் ஆர்மி, டர்பன் கிளேண்டர்ஸ், ஜோபர்க் பஃபல்லோஸ் என மூன்று தென்னாபிரிக்க அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

- Advertisement -

இந்தத் தொடரில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் கலந்து கொண்டு விளையாடினாலும் போட்டியை ஜிம்பாப்வேதான் ஜிம்பாப்வேவில் நடத்துகிறது.

நேற்று இந்தத் தொடரில் இயான் மோர்கன் தலைமையிலான ஹராரே ஹரிகேன்ஸ் அணியும், பார்த்வ் படேல் தலைமையிலான கேப் டவுன் சாம்ப் ஆர்மி அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த ஹராரே அணிக்கு துவக்க வீரராக வந்த இந்திய வீரர் ராபின் உத்தப்பா மற்றும் வெஸ்ட் இண்டீஸின் அனுபவ வீரர் எவீன் லீவிஸ், இயான் மோர்கன், முகமது நபி என எல்லா சர்வதேச அனுபவ வீரர்களும் ஏமாற்றினார்கள்.

- Advertisement -

ஆனாலும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் போனவன் பெரீரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்துகளில் ஆறு பவுண்டரி 8 சிக்ஸர் மூலம் 87 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். பத்து ஓவர்கள் முடிவில் ஹராரே அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.

இந்த இன்னிங்ஸ் போது டோனவன் பெரீரா ஆப்கானிஸ்தானின் கரீம் ஜனத் வீசிய கடைசி ஓவரான பத்தாவது ஓவரின் முதல் பந்தை மட்டும் தவற விட்டு, மீதி 5 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு 30 ரன்கள் குவித்து அசத்தினார்.

அடுத்து பேட்டிங் செய்ய வந்த கேப் டவுன் அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் 26 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 56 ஆறு ரன்கள் அதிரடியாக விளாசி மிரட்டினார்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஏழு ரன்கள் மட்டுமே கொடுக்க போட்டி டை ஆனது.

இதனால் சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டியில் கேப் டவுன் அணி குர்பாஸ் விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு அடுத்து எட்டு ரன்கள் எடுத்து மிக எளிதாக ஹராரே அணி வெற்றி பெற்றது.