வீடியோ.. சொன்னதை செய்த ஸ்டார்க்.. ஆனா செய்யல.. கடுப்பாக்கிய குசால் பெரேரா.. ரசிகர்கள் கடுமையான விமர்சனம்!

0
827
Starc

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோ மைதானத்தில் 14வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இலங்கை அணியும் மோதி வருகின்றன!

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா தன்னுடைய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இதே போல் இலங்கை அணியும் தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியே களமிறங்கி இருக்கிறது.

இலங்கைத் தரப்பில் விஷால் மெண்டிஸ் கேப்டனாக வந்திருக்கிறார். டசன் சனகா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவருடைய இடத்தில் சமிகா கருணரத்னே விளையாடுகிறார். மேலும் பதிரனா நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் லகிரு குமாரா விளையாடுகிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் களம் வந்தார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே பந்துவீச்சாளர் முனையில் நின்ற குசால் பெரேரா, ஸ்டார்க் பந்தை வீசி முடிக்கும் முன்பாகவே வெளியில் செல்ல ஆரம்பித்தார். இதை முதல் ஓவரிலேயே ஸ்டார்க் எச்சரிக்கை செய்து கண்டித்தார்.

ஆனாலும் பின்பு மீண்டும் ஸ்டார்க் வீசிய ஓவரில் இதையே குசால் பெரேரா செய்தார். இந்த முறை ஸ்டார்க் மிகவும் கடுப்பாகிவிட்டார். சீரியஸான முறையில் அவரிடம் ஏதோ பேசிவிட்டு நகர்ந்து விட்டார்.

நீண்ட நாட்களுக்கு முன்பாகவே பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் வெளியேறினால் நேராக ரன் அவுட் செய்வேன், விமர்சனங்களை பற்றி எனக்கு கவலை கிடையாது என்று ஸ்டார்க் கூறி இருந்தார். இந்த நிலையில் அவர் சொன்னதைப் போலவே செய்யவும் செய்தார். ஆனால் ஸ்டார்க் அதில் பாதியை மட்டும் செய்து ரன் அவுட் செய்யாமல் மீதியை விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு முறையும் மன்னித்தது தவறு என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்!