வீடியோ.. சவுத் ஆப்பிரிக்கா டெஸ்ட்.. வித்தியாசமாக தயாராகும் இந்தியா பேட்ஸ்மேன்கள்!

0
428
ICT

இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் வெள்ளைப்பந்து தொடர்கள் முடிந்திருக்க நாளை மறுநாள் சிவப்புப்பந்து தொடரில் விளையாடுகிறது.

இந்திய அணி இதுவரையில் 31 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்ததில், ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்பது தற்போது பலரும் அறிந்த செய்தியாக இருக்கிறது.

- Advertisement -

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த பழைய மோசமான வரலாற்றை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதேசமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் இழந்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி என்பது மீண்டும் கேப்டனாக உத்வேகம் பெறுவதற்கு நல்லவழியாக அமையும்.

இந்திய அணிக்கு இதே போல் கடந்த முறை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில்தான் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவருக்கு முதல் சுற்று பயணமே படுதோல்வியாகவும் அமைந்தது. எனவே அவருக்கும் தென் ஆப்பிரிக்கா மண்ணில் வெற்றி என்பது முக்கியம்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி தற்பொழுது தன்னுடைய பேட்டிங் பயிற்சி முறையில் முக்கியமான சில மாற்றங்களை செய்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த மாற்றத்தின் மூலமாக, பொதுவாக தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் இருக்கும் சிரமங்களை சரி செய்ய பார்க்கிறது.

அதாவது பொதுவாக 22 யார்டில் பந்துகளை சந்தித்து தான் பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெறுவார்கள். கிரிக்கெட்டிலும் அவ்வளவு தூரத்தில் இருந்துதான் பந்து வீசப்படுகிறது. ஆனால் இந்த முறை 18 யாருடைய தூரத்தில் இருந்து பந்தை வீச வைத்து, இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

இதன் மூலமாக தென்னாபிரிக்க ஆடுகளங்களில் இருக்கும் பவுன்சரையும், வேகத்தையும் பழகிக்கொள்ள இது உதவும் என்று இந்திய பயிற்சியாளர்கள் குழு முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய திட்டத்தின் படி தற்போது இந்திய பேட்ஸ்மேன்கள் செயல்படுகிறார்கள். இது போட்டிகள் எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!