வீடியோ; ஸ்கையில் பறந்த ஸ்கை; சூரியகுமார் அபாரமான இரண்டு கேட்சுகள்!

0
1031
Sky

நியூசிலாந்து இந்திய அணிகளுக்கு இடையே குஜராத் மாநில அகமதாபாத் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது!

முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருக்க இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில் டாசில் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்!

- Advertisement -

கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளித்த சுப்மன் கில் இன்றைய போட்டியில் அவர்கள் இருவருக்கும் நியாயம் செய்தார். அதிரடியில் வெளுத்து கட்டிய அவர் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்தியர் அடித்த அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நாலு விக்கட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு இதுவே அதிகபட்ச ரன் ஆகவும் அமைந்தது.

இதற்கு அடுத்து களம் கண்ட நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் தொட்டு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நான்கு பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஸ்லீப்பில் நின்ற சூரிய குமாரின் அபாரமான கேட்ச்சால் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா வீசிய மூன்றாவது ஓவரில் கிளன் பிலிப்ஸ் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் ஸ்லீப்பில் நின்ற சூரிய குமாரின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐந்து விக்கெட்டுகளை இழந்து தற்போது நியூசிலாந்து அணி தடுமாறி வருகிறது. சூரியகுமார் பிடித்த இந்த இரண்டு அபாரமான கேட்ச்களின் காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -