வீடியோ… தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுத ஷாகின் அப்ரிடி.. என்ன நடந்தது களத்தில்?.. ஒரு மாதத்தில் மோசமாக தடுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட்!

0
958
Shaheen

கடந்த மாதத்தில் ஆசியக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணி இவ்வளவு பெரிய சரிவை சந்திக்கும் என்று யாராவது கூறியிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது.

கடந்த ஒரு மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை சுற்றி ஏகத்துக்கும் குழப்பங்களும் விமர்சனங்களும் நிறைந்து இருக்கிறது.

- Advertisement -

உலகக் கோப்பை தொடருக்கு அணி அறிவிக்கும் பொழுது இந்திய அணியை விட வலிமையான அணியாக பாகிஸ்தான் அணியே இருக்கிறது என்று இந்திய தரப்பில் இருந்தும் கூட சில முன்னாள் வீரர்கள் கருத்துக்கள் கூறினார்கள்.

ஆனால் ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயத்தில் இருந்து திரும்பியதும், நிலைமைகள் அப்படியே தலைகீழாக மாறியது. இந்திய அணியின் பலத்துடன் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு பாகிஸ்தானின் பலவீனங்கள் பெரிய அளவில் இருந்தது.

மேலும் நசீம் ஷா காயத்தின் காரணமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்தும் உலகக் கோப்பை தொடரிலிருந்தும் விலகியது, பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவை கொண்டு வந்திருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை வெல்ல பேட்டிங்கில் மிடில் ஆர்டர் மற்றும் பந்துவீச்சில் மிடில் ஓவர்கள் வீசுவதற்கான சரியான வீரர்கள் இல்லை.

- Advertisement -

இதெல்லாம் சேர்த்து பாகிஸ்தான் அணியை வேகமாக வீழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இதே மைதானத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்கின்ற நிலையில், பாகிஸ்தான அணி சிறப்பாக செயல்படும் அதிர்ஷ்டம் இல்லாமல் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வியை பாகிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக மனரீதியாக மிகவும் பாதிப்படைய வைத்திருக்கிறது. தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் டக் அவுட்டில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் கதறி அழுத வீடியோ வெளியாகி இருக்கிறது.

மேலும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த பொழுது கேப்டன் பாபர் அசாம் போட்டிக்கு பின் அழுததாக, தான் கேள்விப்பட்டதாக, பாகிஸ்தான அணியின் லெஜெண்ட் முகமது யூசுப் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!