சற்றுமுன் வெளியானது வீடியோ.. போன மாதிரியே திரும்ப வந்த பும்ரா.. இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0
492
Bumrah

கிரிக்கெட் உலகில் சில வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும்தான் ஆடுகளமும் அல்லது சூழ்நிலையோ விக்கட் எடுப்பதற்கு தேவைப்படாத ஒன்றாக இருக்கும். எந்த மாதிரியான ஆடுகளத்திலும் எந்த மாதிரியான சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்க முடிந்த பந்துவீச்சாளர்கள் சிலர் மட்டும்தான். அவர்கள்தான் லெஜெண்டுகளாக கிரிக்கெட் நிற்கிறார்கள். அப்படி ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் இந்தியாவின் ஜஸ்ட்பிரித் பும்ரா!

வித்தியாசமான பந்துவீச்சு முறையை கொண்டிருப்பதுதான் அவருடைய மிகச்சிறப்பான பந்து வீச்சுக்கு காரணமாக இருக்கிறது. அதே முறைதான் அவர் காயம் அடைவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. அவருடைய பலமே பலவீனமாகி போனது.

- Advertisement -

ஜஸ்ட்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்பாக காயம் அடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதற்குப் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருந்து மீண்டும் வந்தார். ஆனாலும் அவரது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால், அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.

அதற்கு அடுத்து எப்படியும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு வந்துவிடுவார் என்ற நிலை இருந்த பொழுது, அவரது காயம் தொடர்ந்து குணமாகாமலே இருந்து வந்தது. காரணம் அவருக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருப்பது காயம் கிடையாது. பந்துவீச்சு முறையினால் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம்தான் அவரது வலிக்கு காரணம். இதற்கு மருந்தோ அறுவை சிகிச்சையோ தேவைப்படாது; ஓய்வுதான் தேவைப்படும் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியது.

ஆனால் ஒருகட்டத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்பி பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்ய வைத்து மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு கொண்டு வந்து, அவர்களின் கண்காணிப்பில் பயிற்சிக்கு விட்டது. இதற்குப் பிறகுதான் பும்ராவின் உடல்நிலை மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா பும்ரா குறித்து வெளியிட்ட செய்தியில், அவர் முழுவதுமாகக் குணமடைந்து விட்டார், நிச்சயம் அவர் அடுத்து அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று உறுதியாகக் கூறியிருந்தார்.

தற்பொழுது அவர் கூறி இருந்ததற்கு வலுசேர்க்கும் விதமாக வீடியோ ஒன்று வெளிவந்து இருக்கிறது. அதில் மும்பை அணியின் வீரர்களுக்கு எதிராக ஜஸ்ப்ட்ரீத் பும்ரா பந்துவீச்சு பயிற்சி செய்வது தெரிகிறது. மேலும் அவரது பந்துவீச்சு முறை மற்றும் அதற்கான ஓட்டம் எதிலும் மாற்றமோ தொய்வோ காணப்படவில்லை. அவர் எப்படி இந்திய அணியில் இருந்து போனாரோ மீண்டும் அப்படியே திரும்ப வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பந்துவீச்சு படைக்கு பும்ரா தலைமை ஏற்பார் என்றால், அது இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்துக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும். மேலும் அவரது வருகை நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் செயல்பாட்டை முன்னேற்றம் என்று உறுதியாக நம்பலாம்!