வீடியோ; இஷானை அனுப்பி புஜாராவை சிக்ஸர் அடிக்க வைத்த ரோஹித் சர்மா!

0
1228
Rohit sharma

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிக் கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய, இந்தூர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது!

- Advertisement -

இதற்கடுத்து தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜா 60 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தர முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணியை விட 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதற்கடுத்து விளையாடிய இந்திய அணிக்கு மீண்டும் அதிர்ச்சியே காத்திருந்தது. அதிரடியாக விளையாடி முயற்சி செய்து கில் ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து இந்திய அணி நிமிரும்போதெல்லாம் விக்கட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஒரே ஒரு ஆறுதலாக புஜாரா மட்டும் நிலைத்து நின்று 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக இந்திய அணி 163 ரன்களுக்கு மீண்டும் சுருண்டது. தற்பொழுது இந்த நாள் ஆட்டம் முடிவுக்கு வர ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக 76 ரன்களை இந்திய அணி நிர்ணயத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் நாதன் லயன் அபாரமாக பந்து வீசி எட்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் பேட்டிங் போது அஸ்வின் ஆட்டம் இழந்து அக்ஷர் பட்டேல் உள்ளே வர ஆட்டம் கடைசி 15 ஓவர்களைக் கொண்டிருந்தது. அப்பொழுது தொடர்ச்சியாக இந்திய அணிக்கு ரன்கள் வராமல் ஆஸ்திரேலியா வீரர்கள் உள் வட்டத்திற்குள் வந்து நெருக்கடி தந்து கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நேரத்தில் ட்ரிங்க்ஸ் இடைவேளைக்கு முன்பாக ரோகித் சர்மா இஷான் கிஷான் இடம், புஜாரா பந்தை தூக்கி அடித்து, ஆஸ்திரேலியா வீரர்களை வெளிவட்டத்தில் தள்ளி, பிறகு சிரமம் இல்லாமல் சிங்கிள் எடுக்கலாம் என்று பேசிக்கொண்டு இருந்தார். பின்பு டிரிங்க்ஸ் இடைவேளையின் போது உள்ளே வந்து இஷான் புஜாராவிடம் இந்த விஷயத்தைக் கூற, அதற்கு அடுத்த நாதன் லயன் ஓவரில் புஜாரா இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் அபாரமான ஒரு சிக்சரை பறக்க விட்டு. அசத்தினார். புஜாரா கடைசியாக சந்தித்த 3000 பந்துகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது சிக்சர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

தற்பொழுது இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதில் பின்னடைவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது!