நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி மூன்றாவது நாளின் முதல் செஷன் வரையில் போட்டியில் பின்தங்கியே இருந்தது. எனவே இந்திய அணி இந்த போட்டியை தோற்று தொடர் இரண்டுக்கு இரண்டு என சம நிலைக்கு வரும் என இந்திய ரசிகர்கள் கவலைப்பட்டு இருந்தார்கள்.
ஆனால் இந்திய அணி பேட்டிங்கில் தனது முதல் இன்னிங்ஸ் முடித்துக் கொண்டு, இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை 145 ரன்களில் சுருட்டி இருக்கிறது.
இந்திய அணியின் வெற்றிக்கு மொத்தமாக 192 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று எட்டு ஓவர்களை சந்தித்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதன் காரணமாக இந்திய அணி நாளை 152 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு தொடரையும் கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாகும்.
இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணி 2022 ஆம் ஆண்டு முதல் பாஸ்பால் முறையில் விளையாடும் ஒரு தொடரை கூட இழந்தது கிடையாது. இந்திய அணி இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் பென்போக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, அவருக்கு அருகில் சில்லி-பாயிண்டில் சர்ப்ராஸ் கானை நிற்கும்படி ரோகித் சர்மா கூறினார்.
சர்பராஸ் கான் உடனே எதையும் யோசிக்காமல் ஹெல்மெட் இல்லாமல் வந்து அங்கே நின்றார். இதைப் பார்த்த ரோகித் சர்மா ” தம்பி நீ ஹீரோவாக முயற்சி பண்ணாத. ஹெல்மெட் வந்ததும் வாங்கி போட்டுக்கிட்டு வந்து நில்லு” என்று செல்லமாக நகைச்சுவையாக கூறினார். சர்ப்ராஸ் கான் அடுத்து ஹெல்மெட் அணிந்து வந்து நின்றார்.
இந்தத் தொடரில் சர்பராஸ் கான் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அவரது தந்தை தனது மகனைப் பார்த்துக் கொள்ளும்படி கேப்டன் ரோகித் சர்மாவிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔊 Hear this! Rohit does not want Sarfaraz to be a hero?🤔#INDvsENG #IDFCFirstBankTestSeries #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ZtIsnEZM67
— JioCinema (@JioCinema) February 25, 2024