வீடியோ.. ஃபுட்பால் ஆடிய ரஹீம்.. கிரிக்கெட் வரலாற்றில் வினோத விக்கெட்.. நியூசிலாந்து பங்களாதேஷ் போட்டியில் ருசிகர சம்பவம்!

0
4641
Rahim

தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேராக அங்கிருந்து பங்களாதேஷ்க்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தினால், இந்திய சூழ்நிலையை ஒத்துப் போகக்கூடிய பங்களாதேஷ் சூழ்நிலையில் விளையாடுவதற்காக, நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது!

- Advertisement -

இந்த தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடரின் இறுதி மற்றும் மூன்றாவது போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு, அந்த அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் நஜிபுல் ஹூசைன் சாந்தோ மட்டும் 84 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்தார்.

மற்றபடி மொத்த பங்களாதேஷ் அணியும் சேர்த்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 34.3 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பெர்குசன் 6.3 ஓவர்கள் பந்துவீசி, 34 ரன்கள் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இவர் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகளில் அனுபவ விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முஸ்பிகியூர் ரஹீம் விக்கெட்டும் ஒன்று. அந்த விக்கெட்டை ரஹீம் கிரிக்கெட் வரலாற்றில் வினோதமான முறையில் இழந்தது தான் சுவாரசியமானது.

அதிவேகமாக வீசப்பட்ட அந்தப் பந்தை ரஹீம் தடுத்து விளையாட, பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்ப்பில் படுகின்ற உயரத்திற்கு எழும்பி சென்றது, இந்த நிலையில் பந்து ஸ்டெம்ப்பை தாக்கி விடக்கூடாது என்பதற்காக, ரஹீம் பந்தை கால்களால் தடுக்க முயன்றார்.

இறுதியாக பந்தும் ஸ்டெம்ப்பை தாக்க, ரஹீமும் காலால் ஸ்டெம்ப்பை தாக்க, பரிதாபமாக தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இது களத்தில் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையான சம்பவமாக அமைந்தது.