வீடியோ.. விளையாடுங்க வார்னர்.. பாகிஸ்தான் பெருந்தன்மை.. தொடரும் காதல் கதை!

0
327
Warner

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பெர்த் மற்றும் மெல்போன் மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் தோற்று பாகிஸ்தான் அணி தொடரை இழந்துவிட்டது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் முடிவு முதல் இரண்டு ஆட்டங்களில் தெரிந்து விட்டாலும் கூட, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வுபெறும் கடைசி டெஸ்ட் ஆக இது அமைந்திருக்கின்ற காரணத்தினால், மிகுந்த முக்கியத்துவம் கொண்ட டெஸ்ட் ஆக மாறி இருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் 88, ஆகா சல்மான் 53, ஒன்பதாவது பேட்ஸ்மேனாக வந்த அமீர் ஜமால் அதிரடியாக 97 பந்தில் 87 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் 313 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, தனது சர்வதேச கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் டேவிட் வார்னர் துவக்கம் தருவதற்கு வந்தார். அவர் 20 ரன்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அமீர் ஜமால் பந்துவீச்சில், ஸ்லிப்பில் இருந்த அறிமுக பாகிஸ்தான் வீரர் சையூம் அயூபுக்கு எளிமையான கேட்ச் ஒன்றை கொடுத்தார்.

கையில் வந்து பெரிய வேகம் இல்லாமல் விழுந்த அழகான பேச்சை அயூப் அப்படியே கோட்டை விட்டார். ஆஸ்திரேலியாவின் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க மைதானம் அதிர்ந்தது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி, எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் அப்படியே மௌனத்தில் நின்றது.

கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னருக்கு நட்பு ரீதியாக விட்டுக் கொடுத்தது போல இருந்தது. எளிமையான கேட்ச்களை எதிர்பாராத நேரத்தில் விடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் பாரம்பரியமாகவே மாறி இருப்பது, ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் நகைச்சுவை கூறிய விஷயமாக சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -