வீடியோ.. எது மாறினாலும் இது மட்டும் மாறாது.. தொட்டுத் தொடரும் பாகிஸ்தானின் பரிதாபம்!

0
354
Pakistan

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில், இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரது பேட்டிங் அணுகுமுறையும் இந்திய ரசிகர்களே எதிர் பார்க்காத வகையில் மிகவும் அற்புதமாக அதிரடியாக இருந்தது.

இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிக அதிரடியாக ஆடினார். அவர் ஷாஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சை குறி வைத்து பவர் பிளேவில் தாக்கினார். அவரிடம் பவர் பிளேவில் 12 பந்துகளை சந்தித்து அதில் ஆறு பவுண்டர்களை ஓடவிட்டு கலங்கடித்தார்.

அதே சமயத்தில் ஒருபுறமாக பாகிஸ்தான அணியின் இளம் வேத பந்துவீச்சாளர் நஷீம் ஷா பந்தை உள்ளே வெளியே என்று காற்றில் மாற்றி மாற்றி வீசி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினார்.

- Advertisement -

சுப்மன் கில் அவரது ஓவரை ஆரம்பத்தில் ஒரு ஓவர் எதிர்கொண்டதோடு எதிர் கொள்ளவில்லை. இந்த நிலையில் நசியம் சா வீச வந்த நான்காவது ஓவரில் சுப்மன் கில் பேட்டிங் முனையில் இருந்தால். சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.

இதற்கு அடுத்த பந்தை நசீம் ஷா அவுட் ஸ்விங்காக வெளியில் வீச, அந்தப் பந்தை தேடி சென்று சுப்மன் கில் விளையாட போக, பந்து எட்ஜ் எடுத்து முதல் மற்றும் இரண்டாவது ஸ்லிப்புக்கு நடுவில் சென்றது. இதை முதல் ஸ்லீப்பில் நின்ற இப்திகார் அகமதுதான் ரியாக்ட் செய்து பந்தை பிடிக்க சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர் இரண்டாவது ஸ்லிப்பை பார்த்தபடி, மிகவும் அலட்சியமாக நின்றிருந்தார்.

இந்த காட்சியைப் பார்ப்பதற்கு, வழக்கமாக பாகிஸ்தான் ஃபீல்டிங்கில் என்ன மாதிரியான தவறை தொடர்ந்து பாரம்பரியமாக செய்து வருகிறதோ, அதையே ஞாபகப்படுத்தியது. பந்தை வரவிட்டு யார் பிடிப்பது? என்று காத்திருப்பது பாகிஸ்தானுக்கு வாடிக்கையானது. இன்னொரு பக்கம் முக்கியமான நேரத்தில் கைக்கு வரும் பந்தை விடுவதும் அவர்களது பழக்கமாக இருந்து வருகிறது.