வீடியோ : யுஏஇ அணி வெற்றியால் அடுத்த சுற்றுக்கு நுழைந்த நெதர்லாந்து அணியின் பரவச கொண்டாட்டம்!

0
158
Netherlands

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரின் தகுதி சுற்று போட்டியில் இன்று யுஏஇ நமீபியா அணிகளுக்கு இடையே பரபரப்பான ஒரு போட்டி நடந்து முடிந்தது!

இந்தப்போட்டியில் யுஏஇ அணி வெல்லும் பட்சத்தில் நமீபியா அணி உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியே செல்லும், அதே சமயத்தில் நமீபியா அணி வெல்லும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதோடு, இலங்கை அணி இந்தியா இடம்பெற்றிருக்கும் குழுவுக்குள் வரும். இப்படி வித்தியாசமான சூழல் நிலவியது.

இந்த நிலையில் இரண்டு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளை பெற்று, 3-வது ஆட்டத்தில் இலங்கை அணியுடன் தோற்று ரன் ரேட்டில் பின்தங்கியிருந்த நெதர்லாந்து அணி, யுஏஇ நமீபியா அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தது.

இந்த நிலையில் பேட்டிங்கில் பொறுமையாக விளையாடி யுஏஇ அணி 148 ரன்கள் எடுத்தது. அடுத்து பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 69 ரன்களுக்கு நமீபியா அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் நமீபியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வீசா மிகத் திறமையாக அதிரடியாக விளையாடி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 20 ரன்கள் தேவை என்று கொண்டு வந்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஆட்டம் யார் பக்கம் முடியும் என்று பெரிய பரபரப்பு நிலவியது.

இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நெதர்லாந்து அணியினர், யுஏஇ அணி வெற்றி பெற பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கடைசி ஓவரில் நமீபியா அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது. இதனால் இலங்கை அணியுடன் சேர்ந்து நெதர்லாந்து அணி இந்த உலக கோப்பையின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த இனிப்பான முடிவை தொலைக்காட்சியில் பார்த்த நெதர்லாந்து அணி வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!