வீடியோ.. 5 பந்தில் 2 ரன் தேவை.. ஹாட்ரிக் விக்கெட்.. பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் கடைசி ஓவரின் திக் திக் நிமிடங்கள்!

0
8406
Banvsafg

ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட தொடரை 546 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வென்று தொடரையும் வென்றது.

- Advertisement -

இதற்கு பதிலடி தரும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. 2019 உலகக்கோப்பைக்கு பிறகு பங்களாதேஷை ஒருநாள் தொடரில் பங்களாதேஷில் வைத்து வீழ்த்திய ஒரே அணியாக இங்கிலாந்து மட்டும்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா என பெரிய அணிகள் அவர்களது மண்ணில் தோல்வியே அடைந்திருக்கின்றன.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சியால்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு நட்சத்திர வீரர்கள் இப்ராஹிம் ஜட்ரன் மற்றும் குர்பாஸ் இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். அணியின் மூத்த அனுபவ வீரரான முகமது நபி மிகச் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 54 ரன்கள் எடுத்தார். நஜிபுல்லா ஜட்ரன் 23, ஓமர்சய் 33 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.

- Advertisement -

இதை அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் 19, ரோனி 4, நஜிபுல் ஹுசைன் 14, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இளம் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் மற்றும் சமீம் ஹோசைன் இருவரும் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் சமீம் ஹோசைன் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பங்களாதேஷ் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருந்தது. பேட்டிங் முனையில் மெகதி ஹசன் மிராஸ் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பந்து கரீம் ஜன்னத் கையில் இருந்தது.

இந்த நிலையில் முதல் பந்தை மெகதி ஹசன் மிராஸ் பவுண்டரிக்கு விரட்ட, ஐந்து பந்துகளில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது பந்தில் மெகதி ஹசன் மிராஸ் கரீம் ஜனத் பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்த இரண்டு பந்திலும் ஆட வந்த டஸ்கின் அஹமத் மற்றும் நசும் அஹமத் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். கரீம் ஜனத் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் ஆட்டம் கடைசி இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் என்று பரபரப்பான கட்டத்தை எட்டியது. இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த சோரிபுல் இஸ்லாம் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வெல்ல வைத்தார். இறுதிவரை களத்தில் நின்ற தவ்ஹீத் ஹ்ரிடாய் 32 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை வென்று பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கிறது.