வீடியோ.. “என் அம்மா பார்க்க வந்தது என்னை இல்ல உங்களதான்” – விராட் கோலி இடம் பேசிக்கொண்டே இருக்கும் விக்கெட் கீப்பர்!

0
4191
Viratkohli

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது குயின் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதன்படி இந்திய அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வால் இருவரும் அரை சதங்கள் அடித்து இந்திய அணிக்கு வலுவான துவக்கம் தந்தார்கள். இதற்கடுத்து வந்த கில் மற்றும் ரகானே இருவரும் மீண்டும் ஏமாற்றம் அளித்தார்கள்.

இந்த நிலையில் திடீரென்று இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழக்க களத்தில் நின்ற விராட் கோலி ரவீந்திர ஜடேஜா உடன் சேர்ந்து அணியை மீட்டு, முதல்நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் என்ற நல்ல நிலைக்கு கொண்டு வந்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியை விராட் கோலிக்கு சர்வதேச வீரராக 500 வது போட்டியாகும். 500 போட்டிகளுக்கு மேல் ஒரு சர்வதேச வீரர் விளையாடுவது மிகவும் கடினமான ஒன்று. இந்தியாவில் சச்சின் மற்றும் தோனிக்கு பிறகு விராட் கோலி இந்த சிறப்பான இலக்கை எட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்யும்பொழுது ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா தொடர்ச்சியாக விராட் கோலி உடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அது விராட் கோலியை தொந்தரவு செய்வதாக இல்லாமல், அவரைப் புகழ்வதாக இருக்கிறது. விராட் கோலிக்கு இவர் தீவிரமான விசிறியாக இருக்கிறார்.

நேற்று விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் நீங்கள் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும், நீங்கள் ரன் எடுப்பதை நான் பார்ப்பதற்காக இருக்கிறேன் என்று பேசிக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் “என்னுடைய அம்மா என்னிடம் அலைபேசியில் நான் போட்டியை பார்க்க வருகிறேன் உன்னை பார்க்க அல்ல விராட் கோலி விளையாடுவதை பார்க்க என்று சொன்னார்கள். நேர்மையாக என் தாயை இந்த விஷயத்தில் நான் குறை சொல்லவில்லை. அவர்கள் உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று விராட் கோலி இடம் கூற, விராட் கோலிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு என்ன மாதிரி பதில் சொல்வது என்றே தெரியவில்லை. இந்த ருசிகரமான சம்பவத்திற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது!